பக்கம்:அமுதவல்லி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 அமுதவல்லி

‘வீறு” பேசியவனை மண்னணக் கவ்வச் செய்த பாக்கியம் காத்தாயிக்குக் கிடைத்ததே? அதற்குப் பதிலாக அவளுக்குக் கிட்டியது பரிசு ஒன்று. அது என்ன தெரியுமா? அது: வழக்கமாகக் கதைகளிலே வரக் கூடிய சேதிதான். துாங்கிய கடனுக்கு வி ழி ப் பு க் கொடுத்தான் பிள்ளையாண்டான். விழித்திருந்தவளின் மானம் தூங்கும்படியாக ஆயிற்று, குந்தியிருந்த எட்டு அடிக் குச்சு ஏலம் போடப்பட்டது. வீட்டையா ஏ ல ம் போட்டான் அவன்? அவளது மானத்தை அல்லவா விலை கூறிவிட்டான்!... பாவி!

“பாவி!” என்று சபித்துக் கொண்டே, இரவுடன் இரவாக அசலூர்ப் பயணத்தைத் தொடர்ந்தாள் காத்தாயி. உடன் நடந்தாள் தாய். வழியில் ஒரு சந்கிப்பு. மாரியப்பன் சந்தித்தான் கண்ணிரை “நீ யாதொண்ணுக்கும் கிலேசப்படாதே புள்ளே! ... இந்த மாரியப்பனோட நெஞ்சிலே மானம் மருவாதை, உளைப்பு நெசம் ஆகிய இத்தனை சொத்துக்களும் இருக்கிற பரியந்தம் நீ ஏதுக்காம் கண்ணைக் கசக்கிறே? ஒட்டு ஊட்டுக் காரன் போறான், வக்கத்த பயமவன்!... ஒன்னை நான் நெஞ்சிலே தூக்கி வச்சுக் கும்புடுறேனாக்கும், நான் விருத்தனா வேசம் கட்டுறப்பவெம்லாம், வள்ளிப் பொண்ணுவந்தாக்க, அப்ப ஒன்னோட மூஞ்சிதான் என் மனசான மனசிலே நாடகம் போடும். ஒரு நாளைக்கு இப்பிடி கிழவனாட்டம் வந்து ஒன்னை மயக்கி அழுவ வச்சு, அப்பாலே சிரிக்கச் செய்யோனுமின்னு. நான் ரோசனை பண்ணினது கூட உண்டாக்கும்! நீயும் நானும் ஒண்ணடி மண்ணடியாக் குந்திப்படுத்துக் கும்பிட்டு காலத்தை ஒட்டி, வேளையை வேண்டிக்கிட்டே இருக்கலாம், காத்தாயி! நீ வா யை தொறந்து ஒரு பேச்சுச் சொல்லுவியா? இல்லாப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/30&oldid=1228827" இலிருந்து மீள்விக்கப்பட்டது