பக்கம்:அமுதவல்லி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 39

வீட்டுப் பூனைக்குச் சகுனம் இல்லையாம், எதிர் வீட்டுச் செல் லிப் பாட்டி சொல்வாள், அதில் ஒரு நிம்மதி சுப்பையாவுக்கு. இல்லையேல், பாயும் படுக் கையுமாக ஆகிவிட்ட இந்த அவல நிலைமையிலேநெருக்கடி மிக்க இந்தச் சோதனைச் சமயத்திலே, உள்ள கஷ்டம் போதா தென்று, பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கும் சோதனையையும் மேற்கொண்டிருக்கமாட்டான் தான் !

நுரையீரல் குலையினின்றும் பயங்கர இருமல் புறப்பட்டது; இருமல் சத்தம் இவ்வளவு கர்ண கொடுரமாகவா இருக்கும்! எதிரியை விரட்டியடிக்க நம் பீரங்கிகள் இப்படித் தான் சத்தமிட்டிருக்குமோ? இப்போதுதான் சுப்பையாவுக்கு மூச்சு வந்தது. கண்கள் இரண்டும் என்னமா நிரம்பி வழிகிறது: தொண்டைக் குழியில் அரித்த எரிச்சல் அடங்கிவிட்ட தென்று சொல்ல வேண்டும். குழி விழுந்து கிடந்த விழிகளை, வேட்டியை இழுத்துத் துடைத்துக் கொண்டே நின்றது. நின்றபடி மறுபடியும் அந்த அடுப்படியையும் வெள்ளைப் பூனையையும் மாறி மாறி, மாற்றி மாற்றிப் பார்வையிட்டான். ஒரு மடக்கு நீராகாரம் குடித்தால் தேவலாம் போலிருந்தது. மெள்ளக் குந்திக்கொண்டு கஞ்சிப் பானையை இழுத்து நகர்த்தினான். கவிழ்த்திருந்த ஈயச் சட்டியை வாகு கணித்து எடுப்பதற்குள் அவனுக்கு மூச்சு வாங்கியது. மீனாட்சியின் சமர்த்து யாருக்கு வரும்? நேரம் காலம் கூடிவரவில்லை இன்னமும், மாங்குடியில் பிறந்த மனையில் பட்டது போதாதென்று இங்கு புகுந்த இடத்திலும் விதி நீட்டிய தளைக்குள் புகுந்து அல்லற்படுகிறாள், பாவம்! ...

கஞ்சிப்பானை முகம் காட்டி, அகம் காட்டியது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/41&oldid=1375372" இலிருந்து மீள்விக்கப்பட்டது