பக்கம்:அமுதவல்லி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62 அமுதவல்லி



எனக்குப் பழக்கமானார். அதாவது, என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டார். தொடக்கத்தில் பிரவாடிக் குரல் எடுத்து பித்துப்பிடித்த பாங்கினிலே அதோ கதறிக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பற்றித் தான் இத்துணை நேரமாகக் குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் மாதிரி நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இந்தத் தமிழ் மண்ணில் முளைத்து விட்டிருக்கையில், என்னை மட்டிலும் அவர் ஏன் சந்திக்க வேண்டும்? போகட்டும். எப்படியோ சந்தித்தார், சந்தித்தவர், என்னைக் கண்டு பேசிப் பெருமைப்பட்ட பெருமையுடன் விடைபெற்றிருக்கக் கூடாதா? அவர் தம் கதை முழுவதையும் அடி தொட்டு முடிவரைக்கும் எதற்காகச் சொன்னார் ? அந்தத் துன்பமிகு கதையை நான் எதற்காகக் காது பொருத்திக் கேட்டேன்?

   அவரை உங்களுக்குத் தெரியாது!
   அவர் பெயர் : மணிகண்டன் லகாரத்தில் எண்களை உருட்டி, இருப்புப் பெட்ட கத்திலே விளையாடித் திளைத்த நபர் அவர். பட்டுச்சட்டை, பட்டும் படாமலும் நின்ற வெகுளித்தனம். வங்கிக் கணக்கு வைத்திருக்கும் சீமான் வீட்டுப் பெண்கள் “நான்...நீ என்று போட்டி போட்டார்களாம், ஏன் என்று புரியவில்லையா?-அவரை மணவாளனாக அடையத் தான்! எல்லாம் இருத்தும், 'சிருஷ்டி முடிச்சு' என்று ஒன்று இருக்கிறது. பாருங்கள், அந்தத் தொல்வினைப் பயன் அவரது மண்டையைத் திருகிக் குடைந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் தான். அவர் ஆடுதுறையிலிருந்து திருக்கோகரணத்திற்குப் பயணப்பட்டார்.
   அப்போது, புதுக்கோட்டை சமஸ்தானமாக விளங்கிய நேரம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/64&oldid=1376392" இலிருந்து மீள்விக்கப்பட்டது