உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமுதவல்லி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 அமுதவல்லி

வேண்டாம். அவன் சீமான் மகன். சீமாட்டி ஒருத்தி அவனுக்கு 'முன்றானை விரிக்க' எங்கேனும் ஒரு பகுதியில் பிறந்து, பார்வதி இயற்றிய "உசிமுனைத் தவம்" மாதிரி அந்த மானுடப் பெண்ணும் இவனுக்காகத் தவம் பண்ணிக் கொண்டுதான் இருப்பான்; இருக்க வேண்டும், இது வாழ்வின் உட் பொருள் தத்துவம்! -

யார் அழைக்கிறார்கள்?... சைந்நொடிப் பொழுது எனக்காகக் காத்திருப்பீர்களா நீங்கள்?

ஊம்!

சித்திரம் தீட்டும் இளைஞன் அவன். தன் மனச் சித்திரத்தை அலங்கோலமாக்கிக் கொண்டு வந்தான். என்னைப் பேட்டி கண்டான்.

வாழ்க்கைக்கும் வறட்டுச் சிரிப்புக்கும் ஏனோ என்னால் பாகுபாடு காண முடிவதில்லை. பாவம், இந்த ஓவியனைப் பாருங்கள்:

மாரனுக்குத் தம்பியெனத் தோன்றுகிறான். ஆனால் அவன் விழிகளில், இதயம் தோற்ற வேதனை ஊறித் தளும்புகிறது. மனக்குமுதம் குவித்திருந்த விந்தையை என்னால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.

தூரிகையைச் சுற்றிக் கொண்டது பேனா.

அந்த ஓவியன் தன் காதல் கதையை ஆதியோடந்தமாகச் சொன்னான்:

“ஐயா, தாங்கள் பெரிய எழுத்தாளர். ஆகவே, இந்தச் சித்திரக்காரனின் சிந்தையைப் பற்றியும் உங்களால் படித்தறிய முடியுமென்பதில் எனக்குத் தினையளவு சந்தேகங்கூட தோன்ற நியாயம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/76&oldid=1376607" இலிருந்து மீள்விக்கப்பட்டது