பக்கம்:அமுதவல்லி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு முகம் 89

மணிகண்டன் அதோ, துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறான்! மணிகண்டன் சாமானியப்பட்டவனா? நட்டுவனாரைத் தன் கைக்குள் போட்டுக் கொண்டான். ஆடலழகி மோஹினியுடன் காணப்பட்ட ஓர் இளைஞனின் புகைப்படத்தையே சூதாக்கி, சூது விளையாடத் திட்டமிட்டிருந்தான் அவன். அந்தத் திட்டம், அவன் கண்ட தோல்வியில் விளைந்த வெறி யாகும்.

ஆனால், நடந்தது என்ன, தெரியுமா?

நான் கதைகள், புனைபவன். நானே எதிர்பாராத-எதிர்பார்க்க முடியாத . அப்படியொரு மூலைத் திருப்பம் அது.

நெஞ்சிடைச் சிலையமைத்துக் கொண்ட உருவத்தை வெளியே உலவ விட விரும்பும் கலைஞனின் நிலையிலா நான் இருந்தேன்? பின் ஏன் அப்படிப் பட்ட நிலையிலும் நினைவிலுமாக நான் அல்லாட வேண்டும்? மோஹினியைப் பற்றியே சதா சர்வகாலமும் நினைத்து. அந்நினைவிலேயே மனம் மயக்க நிலை பெற்றிருப்பவனைப் போல நான் ஏன் அப்படித் திகைப்படைந்து விளங்க வேண்டும்? அவளைப் பார்த்தேன். சரி. ஒரு தடவை, இரண்டு தடவை என்று தடவைகளுடன் எண்ணிக்கை வரிசை நீண்டது. நீண்ட பெருமூச்சும் நீண்டது. திரும்பத் திரும்ப ஓர் ஆசை ஆவல், ஆதங்கம். அவனைக் கண்டேன், அவளை நினைத்துப் பார்த்தேன். விழிகளின் இடுக்கில் விளையாடியவள், அதே விழிகளின் இடைவெளியில் என் இடைவேளைப் பொழுதானான்.

ஸார்!.

அ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/91&oldid=1376457" இலிருந்து மீள்விக்கப்பட்டது