பக்கம்:அமுதும் தேனும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

கவிஞர் சுரதா



ஷெரின் பர்ஹத் சந்திப்பை ஒற்றர் ஒர்நாள்
தெரிவிக்க, வேந்தனவன் வெகுண் டெழுந்தான்.
அரங்கத்தில் அமர்ந்திருந்த முதல மைச்சன்
ஆர்த்தெழுந்த மன்னவனை நோக்கிக் காதல்
விருந்துண்ணத் துடிப்பவனாம் அவனை வாளால்
வெட்டுவது கோபத்தின் பழைய வேலை.
மரணத்தை விளைவிக்கப் போர்வாள் வேண்டாம்;
வஞ்சகத்தால் அவன் வாழ்வை முடிப்போம் என்றான்.

எட்டடுக்கு மாளிகையில் வாழ்ந்த மன்னன்
எதிர்நின்ற மந்திரியை உற்று நோக்கி;
ஒட்டகத்தின் வெண்ணெயதைப் பூசிக் கொண்டால்
உடலழகு மேலோங்கும் என்ற றிந்து
கட்டுடலில் அதையெடுத்துப் பூசிக் கொண்டு
கண்காட்டிக் காய்காட்டிக் கனிகள் காட்டிப்
பொட்டலத்து மார்பகத்தைத் திறந்து காட்டிப்
புண்தானம் செய்தவளை நம்பிக் கெட்டேன்.

வாழ்கமன்னா எனவாழ்த்திக் கொண்டே என்னை
வஞ்சித்து விட்டாளே மோசக் காரி!
ஆழ்கடல்சூழ் உலகமகா கவிஞர் கோமான்
ஆதிபி ஸபீரென்டான், ஆக்ஸஸ் ஆற்றில் மூழ்கடிக்கப்
பட்டாளே அதுபோல், என்னை
முழுமோசம் செய்தவளும் ஆற்று நீரில் மூழ்கடிக்கப்
படவேண்டும் என்றான் மன்னன்.
முதலமைச்சன் சிரித்தபடி அவனை நோக்கி,