பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

கூட்டத்தில் ஒருவர்:-என்ன ஐயா அக்கிரமம் கிள்ளி வளவனுக்கு இப்படியா புத்தி போகும்? சாமானிய மனிதன் கூட இந்தக் கொலை செய்ய அஞ்சுவானே!

மற்றொருவர்:- சிறு குழந்தைகளை இந்த யானைக் காலால் இடறச் சொல்லிக் கட்டளை யிட்டிருக்கிறானே! இவனுடைய குலம் விளங்க வேண்டாவா? பச்சைப் பசும் பாலகர்கள்; ஒன்றும் அறியாத குழந்தைகள். இவர்கள் என்ன பாவத்தைக் கண்டார்கள்? இவர்களுடைய தகப்பன் இந்த அரசனுக்குப் பகைவன் என்ருல் அதற்கு இவர்களிடமா பழி தீர்த்துக் கொள்வது?. வீரம் இருந்தால் மலையமானைச் சிறைப் பிடித்திருக்கலாமே! அவன் இருந்தபோது எல்லாரும் அடங்கிக் கிடந்தார்கள். இப்போது குழந்தைகளிடம் தங்கள் அரக்க இயல்பைக் காட்டு கிறார்களே!

முதலில் பேசியவர்:-மலையமானையா சிறைப் பிடிப்பது? மலையமான் இறந்து போயும் இவனை மருள வைக்கிறானே! அவனல்லவா வீரன்? இவன் அரசன்? மனித உணர்ச்சி உள்ளவனா? குழந்தைகளைப் பெற்றவனா?

இரண்டாமவர்:-யாரேனும் வளவனை அணுகி இது அடாத செயல் என்று சொல்லக்கூடாதா?

முதல்வர்:-மந்திரிமார்கள் சொன்னர்களாம். இது சம்பந்தமாக அவைக்களப் புலவர்கூட அரசனிடம் கோபங்கொண்டு அரண்மனைக்கு வருவதில்லையாம்.

(குழந்தைகள் அழுகின்றன. மக்கள் ஆரவாரம் செய்கின்றனர்.)

இரண்டாமவர்:-ஐயோ! பாவம் குழந்தைகள் கதறுகின்றன. குழந்தைகளைத் தெய்வமாகப் போற்றும்