பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

41

திருத்தங்கி. உங்கள் வீடு புதுக்கருக்கு அழியாமல் இருக்கிறது" என்ருர் ஒளவையார்.

"ஆம், உழைத்து ஈட்டிய பொருளைக் கொண்டு வீடு கட்டுகிறோம் நாம் வாழ்வதற்காகக் கட்டுகிறோம். கண்ட பேரை இங்கே வரும்படி அழைத்து, அவர்கள் இதன் அருமை தெரியாமல் குப்பை போட ஆரம்பித்தால் வீடு எதற்காகும்? 'பொருள்தனைப் போற்றிவாழ்’ என்று நீங்கள் அருளிய திருவாக்கை நான் கடைப்பிடிக்கிறேன்" என்று திருத்தங்கி கூறினார்.

"பிறருக்குக் கொடுக்காத உலோபத்தனம் தம்மிடம் இருப்பதைப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறாரே இந்த மனிதர்" என்று கூட்டத்தில் இருந்த சிலர் நினைத்தனர்.

"பாட்டியின் அமுதத் திருவாக்குக்கு இந்த உலோபி தவறாக அல்லவா பொருள் கொண்டிருக்கிறான்? பொருள்தனைப் போற்ற வேண்டும்; போற்றி வாழ வேண்டும். இவன் எங்கே வாழ்கிறான்?" என்று சிலர் எண்ணினர்.

ஒளவையார் திருததங்கியின் பேச்சைக்கேட்டுப் புன்முறுவல் பூத்தார்.

"தாங்கள் மருத்தன் வீட்டுக்குப் போனதாகச் சொன்னர்கள். வாழத் தெரியாத மனிதன் அவன். வீடு முழுவதும் எச்சிலுந் துப்புமாக இருக்கும். எப்போதும் சோம்பேறிகளுக்குச் சோறு போடுவதும் அவர்கள் படுத்துப் புரளுவதற்கு இடம் கொடுப்பதுமாக அவன் இருக்கிறான். வீட்டைத்தான் தாங்கள் பார்த்திருப்பீர்களே! கண்ணுல் காணச் சகிக்கிறதா? அவன் வீட்டு வாழைத் தோட்டத்தைப் பார்த்தீர்களா?"

"பார்த்தேன்.”

"இங்கே நானும் வாழைத் தோட்டம் போட்டிருக்கிறேன். வாழையை எப்படிவளர்க்க வேண்டும் என்று - -