பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

'புத்துலகை' அதன் விளைவாக்கிப் பூரிக்கின்றார். அவருடைய மூச்சும் பேச்சும், எழுத்தும் பாட்டும் அறிவிப்பது அவ்'வுறுதி'யையே!

காலை ஞாயிற்றின் கதிர்கள், கடலலைகள் மீது தாவிடும் காட்சியினிமையும், இருள் சூழ்ந்த வையத்தில் அடர்ந்த காட்டின் நடுவிடத்தின் துன்பக் கொள்கலநிலையும், 'குடும்ப விளக்கும்', 'இருண்டவீடு'மாய்க் காட்சியளிக்கின்றன.

'குடும்ப விளக்கு' அறிவொளியும், அன்பொலியும் அழகுக் காட்சியும் பெருக்கும் குடும்பங்களே திருநாட்டினைத் திகழச்செய்யும் என்ற உறுதியால் உருப்பெற்றதாம். எல்லா நலமும் ஈந்திடுங் கல்வி இல்லா வீட்டை இருண்ட வீடாகக், கவிஞர் ஏட்டிலே காட்டுகிறார், நாட்டிலே இருண்ட வீடு இருக்கக் கூடாது என்ற உறுதியினால்!

நள்ளிரவு மெதுவாய் நடப்பதற்குக் கேள்வியால் அகலும் மடமையையும் எல்லாரும் ஒன்றாய் இருந்து மகிழ்ந்துள்ளம் சிற்றுணவு உண்பது வல்லார் இலக்கியத்தை வாரி அருந்துதலையும், நெஞ்சைக் கிளிபறித்து போனதினால் (காதலர் பிரிவு) மரம்போல அங்கே அவன் தனித்திருந்தது, தண்டமிழ்த் தேன் உண்டவர்கள் பொருளை யெண்ணித் தணிப்பதனையும், குழந்தைகள் உடனிருந்து கொஞ்சியே உண்பது, பழந்தமிழ்ப் பொருளை அள்ளிப் படித்தவர் விழுங்குதலையும், குடும்பத் தலைவி, குழந்தைகளுக்கெல்லாம் கண்ணுறங்குமுன் தணிக்கைச் செய்தல், பண்டிதர்கள் பழங்கதையின் ஓட்டைக்கெல்லாம் பணிக்கை யிடலையும், உவமையாய் அமைத்திருப்பதும், அவ்வுவமையே