பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39

போம்" என்று புரட்சியின் விளைவாகிய புது உலகைப் புது வாழ்வைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

புரட்சி மலர்ந்து, புத்துலகம் பூத்து, புதுவாழ்வு மணங்கமழப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரும்பெருந் தொண்டுகளாற்றியுள்ளார். ஆங்கில நாட்டுக் கவிஞர் ஷெல்லியைப்போல, அமெரிக்க நாட்டுக் கவிஞர் வால்ட் விட்மனைப்போல, இஸ்லாமிய இனத்திற்குக் கிடைத்த கவிஞர் இக்பாலைப்போல, திராவிட நாட்டிற்குத், தமிழ் இனத்திற்குக் கிடைத்த ஒப்பிலா அறிஞர் புரட்சிக்கவி பாரதிதாசன். அவருடைய பணியே புரட்சிக்கு முதற்பணி; எந்நாளும் நின்று நிலைத்துப் பயன் விளைக்கும் அரும்பணி; எவருக்கும் நலம் விளக்கும் பெரும்பணி; தமிழ் மொழிக்கும் இலக்கியத்துக்கும் வாழ்வளித்த உயிர்ப்பணி. இந்நாட்டிளைஞர்கட்கெல்லாம் இன்பப் பணி; அந்தப்பணியே புரட்சிக்கவிஞருக்கு அணி. அப் புரட்சிக் கவிஞரே தமிழகத்தின் தலைமணி.

வாழ்க புரட்சிக் கவி!
வெல்க அவ்வுறுதிகள்!!

க.அன்பழகன்