உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 மிளிரும். அவருடைய நினைவுச் சொற்பொழிவில் அவரோடு தொடர்புகொண்ட தாங்கள் பேசியது மிகப் பொருத்த மானது. தாங்கள் பேச்சில் தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றத் தையும், வளர்ச்சியையும், அப்பத்திரிகைகள் எந்த அளவுக்குத் தமிழ்நடையை உருவாக்கப் பாடுபட்டிருக் கின்றன; காலத்துக்கும் தேவைக்கும் ஏற்ற வகையில் அவை எந்த அளவுக்கு தமிழ் நடையில் மாற்றத்தை உண்டாக்கி யிருக்கின்றன என்பதைப் பற்றியெல்லாம் ஆராய்ந்து அழகுடன் பேசியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் தோன்றியுள்ள எல்லாத் தமிழ் இதழ் களைப் பற்றியும் அவை ஆற்றியுள்ள தொண்டுகளைப் பற்றியும் விருப்பு, வெறுப்பு இல்லாமல் 'சமன்செய்து சீர்தூக்கும் கோல்'போல் சரியாக நடுநிலைப் பாங்கோடு ஆராய்ந்து பேசியிருக்கிறீர்கள். தெரிவிக்க வேண்டிய இடத்தில் தங்கள் கருத்துக்களையும் அழுத்தமாகத் தெரிவித்திருக் கிறீர்கள். தமிழ் நடை வாலாற்றில் தமிழ்ப்பத்திரிகைகளின் பங்கு கணிசமானது என்பது எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடியதுதான். தமிழ் உரைநடை வரலாற்றைப் பற்றி ஆராய்ந்து கொள்ள விரும்புவோர்க்கு தங்கள் தமிழ் இதழ் கள் என்ற நூல் மிகப் பயன் உடையதாகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நூலைப் படிக்கும் வாய்ப்பளித்த தங்கள் அன்பிற்கு நன்றி. சமரச சன்மார்க்கத் தலைவர் திரு. நா. மாகலிங்கம் செட்டிநாடும் தமிழும் The author has taken great pains to give in this book fairly exhaustive account of the Chettiars from the earliest times, with material mainly from literary sources