உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 இடங்களையும் மக்களையும் கூர்ந்து நோக்கி ஆய்வதில் இவர் பெற்றுள்ள தனிப்பயிற்சியே இத்தகைய நூல்கள் எழுதுவதில் இவர்க்குத் துணையாக உதவியுள்ளது எனலாம். இவர்தம் எழுதுகோல் தமிழ்நாட்டினைப் பற்றி விரிவாக எழுத முன்வந்தது மகிழத்தக்கது. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களையும் நன்கு ஆராய்ந்து ஆங்காங்குக் கிடைக்கும் குறிப்புக்களையெல்லாம் விடாமல் தொகுத்து, நிரல்பட வகுத்து, அழகிய நூல்களாக ஆக்கித்தரும் இவர்தம் முயற்சி போற்றுதற்குரியது. -டாக்டர் மு. வரதராசன் தென் ஆர்க்காடு மாவட்டம் என்னும் இந்நூலிலுள்ள பல குறிப்புக்களில் நூலாசிரியரின் ஆழ்ந்த அகன்ற அறிவு துலங்குகிறது. தமக்கே உரிய நகைச்சுவை நடையில் அமைத்துச் சில செய்திகளைக்கூறிக் கிண்டல் செய்து கிண்டலுக்கு உரியவர் மனம் கோகாமல் இருக்கும்படி செய்துள்ளமை நயக்கத் தக்கது. -டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் சேலம் மாவட்டத்தின் வரலாற்றையும் இருபதாம் நூற்றாண்டில் சேலம் அடைந்துள்ள மாறுதல்களையும் விரி வாகவும் கோவையாகவும் கடைசி வரையிலும் ஆர்வம் குன்றாமலும் எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. -டாக்டர் ப. சுப்பராயன் Somalay's present volume on Tirunelveli District is far wider in its scope and content, than any official gazetteer. The emphasis is on a cultural survey of the