பக்கம்:அமைதி, பாரதிதாசன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பத்து

ண்ணாங்கட்டியின் எதிரில் ஒரு பெரிய ஊர் தோன்றுகிறது. வானைத் தொடுகின்ற இரண்டு மாடி வீடுகள் தோன்றுகின்றன. இவ்விரண்டு மாடி வீடுகளும் தம்மில் நெருங்கியிருக்கவில்லை. இரண்டுக்கும் நடுவில் ஒரு கல் தொலைவு இடை வெளியிருக்கலாம். மண்ணாங்கட்டி ஊரில் நுழைகிறான். ஊர்ப்புறத்தில் புல்லற்ற வெளியில் சில மாடுகள் மேய்கின்றன. அவை எலும்பும் தோலுமாய்த் தோன்றுகின்றன. தெருக்களைக் காணுகின்றான். நிறையப் பொத்தற் குடிசைகள்; தெருக்களில் தீனியின்றி மண்ணைக் கொத்தித் தின்னும் இளைத்த கோழிகள் மேய்கின்றன. ஆடையின்றி விலாவெடுத்த சிறு குழந்தைகள் மண்ணிற் கிடக்கின்றனர். குலைக்கவும் வலியின்றி நாய்கள் மண்ணாங்கட்டியைக் கண்ணாற் பார்த்துப் பழையபடி புறங்கால் இடுக்கில் தலைவைத்துச் சுருண்டு படுக்கின்றன.

பேச்சுக் குரலற்ற குடிசைகளைக் காணுகின்றான். சில குடிசைகளை அவன் எட்டிப்பார்க்கின்றான். பூனை தூங்கும் அடுப்புக்கள், ஈரமற்ற முற்றங்கள், ஒட்டடை நிறைந்த அடுக்குப் பானைகள் காட்சியளிக்கின்றன, அவன் விழிகளில் இரக்கமும் வியப்பும் மாறி மாறித் தோன்றுகின்றன.

ஒரு மாந்தோப்புத் தோன்றுகின்றது. மரங்களில், காயில்லை, வடுக்களும், பூவும் இருக்கின்றன. ஏழை மக்கள் சிலர் மாவடு, பூ, தளிர்

16