பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதிக்குக் கண்ணனர் அறிவுறுத்திய காதை

119



75 அரசன் மகளாம் அமரா வதியை விரும்பா தேயென விளம்புக அவற்கே. உமது திறமுள உரையால் என்மகன் அமரா வதியை அறவே மறக்கச் செய்தல் வேண்டும்; செய்யா தொழியின்

80 உய்தல் இல்லை உறுதியாய்க் கூறும்; என்றுசொல் லிக்கொண் டிருக்கும் வேளை அம்பி காபதி அருகே வருவதைக் கம்பர் கண்டு கட்டினார் நடையை. கண்ணனார் அமர்ந்துள காவிடம் அம்பி

85 நண்ணி வணக்கம் நவின்றமர்ந் தனனே. பெரியவர் கண்ணனார் பேச்சுத் தொடுத்தார்; உரிய முறையில் உடல்நலம் உசாவினார்; என்னநூல் இப்பொழு தெழுது கிறாயென முன்னர்ப் பற்பல பேசி முடித்துப்

90 பின்னர்க் குறித்த பேச்சை எடுத்தார்; அம்பி! ஒன்றுனக் கறிவிக்க விரும்புவல்; நம்பியென் உரையை நன்கு கேட்க. மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என்னும் திண்ணிய ஆசைகள் தேருங் காலைப்

90 பெண் ணாசை என்பது பெரிதுங் கொடியது. கன்னியொருத்தியைக் களவிற் புணர்தலோ பிறன்மனை விழைந்து பெண்டாடல் புரிதலோ அறனிலை என்பதை அறிகுவை நீயே! என்று கண்ணனார் இயம்பிய போதே,

100 நன்று நவின்றீர்! நானிலம் தூற்றப் பிறனில் விழைவதும் பெண்டாடல் செய்வதும் அறனிலை என்பதை அறிவேன்; ஆயின்,


80. உய்தல் - பிழைத்தல். 84. காவிடம் - சோலையில் குறிப்யிட்ட இடம். 87. உசாவுதல் - கேட்டறிதல். 97. முழுதும் - பிறன் மனைவியை விரும்பிப் பெண்டாட்டியாக்குதல். 100. நானிலம் - உலகம்.