பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை

இன்ப இரவை எதிர்பார்த் திருந்த
அம்பி காபதிக் கானநண் பன்போல்
தங்கம் உருக்கிய தட்டேய் ஞாயிறு
திங்கள் வருமுன் திகழும் குடபால்
5 மங்கி மறைந்தான்; மாலையும் கழிந்தது.
முன்னிர விலேயே முற்றும் உண்ணாமே
கன்னி மாடக் காவகம் வருகெனக்
கூறியும் அம்பிக் குழகன் வராமையால்
மாறி மாறி வருந்திசை நோக்கிப்
10 பெண்டிருட் சிறந்த பெதும்பை அமராவதி
வண்டல் அயர்ந்த வளம்பல கெழீஇய
தண்டலை தன்னில் தனியாய்த் தவித்தே
உளத்துள் பற்பல உன்ன லானாள்:
காவகம் வருகையில் காவலர் பிடித்துக்
15 காவலன் எந்தைபால் கட்டிச் சென்றனரோ!
மன்னன் தன்னிடம் மாட்டிக் கொண்டவர்
என்ன படுவாரோ! ஏழையென் செய்வேன்!
அன்றே முயங்க அவாவிய அவரை
இன்று வருமா றியம்பியனுப்பினேன்.
20 வாய்க்கும் என்றே வந்த அவர்க்கு
வாய்க்கெட் டியது வழுக்கி வீழ்ந்ததே.
ஒருவேளை, மறைந்திருந் தென்னை மயங்க வைத்துத்


3, ஏய் - போன்ற 4. குடபால் - மேற்கு. 8. குமுதன் - அழகன், இளைஞன். 10. பெதும்பை - பெண். 11. வண்டல் - பெண் களின் விளையாட்டு; அயர்தல் - விளையாடுதல்; செழி இய. கிறைந்த, 12. தண்டலை - சோலே. 15. காவலன் - அரசன்; எங்தை. எம் கங்தை. 18. முயங்க - புணர. 20. வாய்க்கும் - கைகூடும்.