பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதலர்கள் கலந்து மகிழ்ந்த காதை

131

அறிவுறின் மானம் அகன்று விடுமென
ஆட்டியர் காமம் அகத்துள் வைப்பர்
அரிவையர் போலவே ஆண்களும் கற்பை
அருமையாய்ப் போற்றி ஆள்பவர் அல்லரோ?

(3) பாவையர் இன்பமே பாரில் பெரிதெனப்
பசப்புதல் வெற்றுப் பகட்டுப் பேச்சாம்
பூவையர் இன்பினும் பூவுல கதனில்
போற்றப் பெறுவது புகழ்சால் தமிழே!

160 நாவினால் தமிழை நயமறிந் தோதியோர்
நங்கையர் யாரையும் நாட மாட்டார்
வாவிநீர் இருக்க வறட்டுக் கானலை
வவ்வுவோர் வடித்த மடவோ ரல்லரோ?

என்றுபா டிக்கொண் டிருக்கும் போதே
நன்றுநும் பாவென நங்கை கூறுவாள்:
தமிழ்ப்பெரு நூல்களைத் தகவாய்க் கற்றே
165அமிழ்தாம் சுவையினை அறிந்தீர் அதனால்
வறட்டுக் கானலென வைதீர் எனையும்;
முரட்டுப் பாக்கள் முனிவுறச் செய்தன.
இனியெனைத் தீண்டுதல் இம்மியும் வேண்டா;
நனியும் தமிழையே நன்கு சுவைப்பீர்!
170என அவள் ஊட, எழிலோன் கூறுவான்:
கூடல் அறியாமே ஊடல் கொண்டாய்;
நீட விடலிதை நிற்கழ கன்று;
குறளி லுள்ள முதற்பா கூறென,
மறுதலை யின்றி மங்கை கூறுவாள்:
175“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி


156. ஆட்டியர் - பெண்கள். 161. வாவி-குனம்; வவ்வுவோர். பற்றுவோர்; வடித்த-வடிகட்டிய; மடவோர் - மடையர். 167. முனிவு - சினம். 170. ஊடல் - போலியான சிறு சினம் கொள்ளல்; எழிலோன் - அம்பிகாபதி. 171. கூடல் - புணர்தல், 172. நிற்கு . நினக்கு. 174. மறுதலை - மறுப்பு.