பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேந்தன் ஊரலர் உணர்ந்த காதை 135


அழுவான் சிரிப்பான் அடியறு மரம்போல்
விழுவான் எழுவான் வெகுண்டு பேசுவான்
அம்பிகா பதியும் அமரா வதியும்
காதலிப் பதாகக் காதால் கேட்டுத்

25 தன்னை அம்பிகா பதியெனச் சாற்று வோன்
தன்னுறு நிழலை அமராவதி யாக்கியோன்;
நிலவொளி யிலேதன் நிழலை நோக்கிப்
பலபல காதல் உரைகள் பகர்வான்;
எனது கண்ணே இனிய கண் மணியே

30 கனியே தேனே கன்னலே கண்டே
அழகிற் சிறந்த அமரா வதியே!
அழகள் இதோவீண் டம்பிகா பதியுளேன்.
வாய்திற வாயோ வருத்தமோ என்மேல்!
நாய்போல் நினக்கு நான்பணி புரிவேன்

35 என்னை மணக்க என்ன தடையோ
உன்னைத் தழுவ உடன்படு வாயோ?
யான் கை யசைப்பின் நீயும் அசைப்பை
யான்செய் வனவெலாம் நீயும் செய்குவை.
வாய்திற வாது வாளா இருப்பதேன்?

40 நோய்செய் யாதே நுவலுதி வாயால்;
என்று கூறி இறுகத் தன்னிழல்
நன்றே தழுவி நக்கு மகிழ்வான்;
தானணி சுள்ளி தழைகொள் தாரினைப்
பூணணி எனவே பூட்டுவான் நிழற்கு;

45 நமது மணம்நிகழ் நன்னாள் யாதோ?
உனது கருத்தை உரையென வினவுவான்;
இன்னணம் குழறியோன், இறைவனாம் கிழவனை


22. வெகுண்டு - சினந்து. 25. சாற்றுவோன் - சொல்லுபவன். 30. கன்னல் - கரும்பு; கண்டு - கற்கண்டு. 37. அசைப்பை - அசைப்பாய். 39.வாளா -வாய் பேசாமல்.40.நுவலுதி - சொல்லுவாய். 42. நக்கு - சிரித்து. 43. தாரினை - மாலையை. 44. பூணணி - பூணும் அணிகலம். 47. குழறியோன் - குளறினவன்; இறைவன் - அரசன்.