பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

அம்பிகாபதி காதல் காப்பியம்



தடையிலாது வாழத் தகுமோ நினக்கே?
என்றவன் கூற, இயம்புவான் புலவன்:

(அம்பிகாபதி)

வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க
75 சொல்லே ருழவர் பகை' எனுங் குறளை
அறியா யோ நீ? அழிந்து போக
வெறியோ டென்னை வெல்ல முயல்கிறாய்
என்ற அம்பிக்கு எதிர்விடை தருவான்:

(சிம்மன்)



சொல்லால் என்னை நீ சுளுவாய் வெல்லலாம்
80மல்லால் வெல்ல மாட்டாய் என்றுணர்
என்ற சிம்மற்கே இறுப்பான் அம்பி;
அம்பி :மற்போ ருமியான் மாணக் கற்றுளேன்
நிற்பொரு தின்னே நிற்கா தோட்டுவோனென,
சிம்மன்:மற்போர் புரிந்துனை மடியச் செய்வேன்

85எற்பொரு துன்னுல் வெல்ல இயலாதென,
அ : சராசந்தன் நீஎனும் எண்ணமோ உனக்கு?
சி: வென்றவனை வீழ்த்திய வீம ைேநீ?
அ : கண்ணனை வெல்லக் கம்சன் அனுப்பிய
மல்ல ரெனவுனை மாணவெண் ணுதியோ?

90சி: கம்சனின் மல்லரைக் கொன்ற கண்ணனேநீ?
அ : மல்லில் வல்ல வாண அவுணனேநீ? -
சி: மல்லில் அவனை மாய்த்தகண் ணனுேநீ?
அ: அரியமல் வல்ல ஆமூர் மல்லனேநீ
சி : பொருதவற் கொன்ற போர்வைக்கோக் கிள்ளியோநி


74. வில் ஏர் உழவர் - வில் வல்ல வீரர். 75. சொல் ஏர் உழவர் - சொல் வல்ல புலவர் 80. மல்லால் - மற்போரால். 81. இறுப்பான் - விடை சொல்லு வான். 83. கிற்பொருதுகின்னேப் பொருது; இன்னே - இப்பேதே. 85. எற்: பொருது - என்னைப் பொருது. 91. அவுணன் - அரக்கன். 94. பொரு தவற் கொன்ற - பொருது அவனேக் கொன்ற. 86.94 : சரா