பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை

177


75 இன்னவன் பாடலே இ.தெனக் கூறிச்
“சற்றே பருத்த தனமே" என்னுமிப்
பாடலே முதலில் பாடிக் காட்டென,
பாட லாளுன் அம்பியப் பாடலை:

80 "சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே யசையக் குழையூ சலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின் பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே"

85 என்று முடிக்க, இறையவன் கூறுவான்:
இறுதி யிப்பா இவரெழு தியதே
உறுதி கூறுவேன் உண்மை உண்மை!
இந்தப் பாச்சிற்றின்பமே உடைத்திதை
எந்தப் புலவரும் மறுக்க வியலுமோ?
கடவுட் பாவொடு காமங் கலந்தவர்
தொடவுந் தகுமோ தூயவென் மகளை. கொலையொறுப் பிவர்க்குக் கொடுக்கத் துணிகிறேன்.
இலைமறுப் பிதனில் என்று கூற,

(அம்பிகாபதி)



இப்பா இவணியான் எழுதிய தன்றென
அப்பால் மீண்டும் அம்பி மறுக்க,

(அரசன் செயல்)



'சற்றே பருத்த தனமே" என்னும்
பாட்டமைந்துள்ள பனையோலை யதனைக்
காட்டி அவையில், கையெழுத் துனதே ;
இந்தப் பாவுள ஓலை நினது


78. இன்னவன் - இந்த அம்பிகாபதியின். 77. தனம் - முலே; தாள் வடம் - முத்து மாலை. 78. துற்றே - நெருங்கி; குழை - சாதணி; ஊசலாட ஊஞ்சலாட துவர் - பவள நிறம். 86. ஒறுப்பு - தண்டன.

அ-12