பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அம்பிகைமீது பாடல்)

(1) “குமரியொடு இமயம்வரை கொல்படையொடு சென்றிட்டே விமலையெனுங் கயற்கண்ணி வென்றனள்காண் என் தோழீ. வென்றிடினே கைலைமலை வீற்றுளசிவன் எதிரினிலே குன்றியதேன் குழைந்திட்டதேன் கூறிடுவாய் பதில்தோழீ.

135 குன்றிடினும் குழைந்திடினும் கோன்மதுரை நகரினிலே வென்றவட்கே முன்பூசனை விளங்கிடுவாய் இதைத் தோழீ. முன்பூசனை பெறுகின்ற முதல்வியவள் அம்பிகாபதி தன்பூசனை பெற்றிடவும் தக்கவவற் காத்திடுக!”

(2) “உலகின்முதற் பெண்ணரசி ஒருத்தியைநீ அறிவாயோ? 140 உலகின்முதற் பெண்ணரசாய் உற்றவளை உரைத்திடுநீ. அங்கயற்கண் ணம்மைமுதல் அரசியென்றே அறிந்திடுவாய். அங்கயற்கண் ணம்மைதனை அரியசிவன் மணந்ததனால் அவர்தமையே அரசரென அறைந்திடலே முறையாகும். அவர்தமையே மணந்திடினும் ஆண்டவளங் கயற்கணியே.

145 உலகாண்ட அங்கயற்கண் உமையம்மை தண்ணருளால் அலகில்புகழ்த் தமிழ்ப்புலவன் அம்பிகாபதி யைக்காக்க!”

(3) “கச்சியிலே காமாட்சி கனிவொடுமுப் பத்திரண்டு மெச்சுமறம் செய்ததனை மேதினியோர் அறியாரோ? மெச்சுமறம் செய்திடினும் மேதினியோர் சிவன்றனையே

150 நச்சுகின்றார் முதல்வரென நானியம்ப வேண்டுமோடி? இத்தரையோர் சிவன்றனையே ஏற்றிடினும் முன்னவராய்ச்


136. வென்றவட்கே - வென்ற அங்கயற்கண்ணிக்கே; மதுரையில் சிவனுக்கு முன் அம்பிகைக்கே முதல் பூசன நடைபெறும். 187 - 138. அம்பிகாபதிதன் - அம்பிகாபதியினுடைய; தக்கவவற் - தக்க அவன் - தகுந்த அவனுடைய 147. கச்சி - காஞ்சிபுரம். 148. மெச்சு மறம் - மெச்சும் அறம்; மேதினியோர் - உலகத்தார்.