பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அம்பிகாபதி காதல் காப்பியம்

50 தத்தனைப் புணர்ந்ததாய்த் தன்மேல சாட்டிய
பொல்லாப் பொய்யுரை பொறாஅது வாணாள்
எல்லாம் கன்னிமை ஏற்ற விசாகை;
சேற்றில் முளைத்த செந்தா மரையாய்
வேசியாஞ் சிப்பியில் விளைந்த முத்தாய்

55 இறுதி வரையும் இருநிதிக் கோவலன்
ஒருவன் தனையே உளத்தில் வரித்து
மருவிய கற்புறு மடந்தை மாதவி;
வதியும் பூம்புகார் வளவன் மகனாம்
உதய குமரனை உதறி எறிந்தோள்,

60 மாப்புகழ்ச் சாத்தனர் மாண்புடன் யாத்த
காப்பியத் தலைவியாம் கவின்மணி மேகலை;
தன்னுறு கணவனே தன்னைத் தெய்வமாய்
உன்னி வணங்க, உடல்தசை உதறிக்
கன்னித் தமிழில் கடவுள் நூல்பல

65 கன்னலாய் வழங்கிய காரைக்கா லம்மையார்;
தேனனை இசையால் தீந்தமிழ் பரப்பிய
ஞானசம் பந்தனாம் நற்றமிழ் மதலை;
பூவேந் தனையும் பொருட்படுத் தாத
பாவேந்தன் பைந்தமிழ்ப் பரவை கடந்தவன்,

70 பெரிய கம்பசூத் திரமோஎனப் பேச
அரிய பாப்பல ஆயிரம் ஈந்தோன்,
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும்
கவிபாடும் என்னும் கவின்சீர் பெற்றவன்,
கல்வியிற் பெரிய கலைஞன் கம்பன்;

75 சங்கரன் பெற்ற சடையன், வளமெலாம்
மங்காது வழங்கி மக்களைக் காத்தலால்
தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்துத்

51. வாணாள் - வாழும் நாள். 54. வேசி - விலைமகள். 57. மடந்தை - பெண். 60. யாத்த - இயற்றிய, 65. கன்னல் - கரும்பு. 67. மதலை - சிறு பிள்ளை. 69. பரவை - கடல்.