பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமைச்சர் மகனின் சூழ்ச்சிக் காதை

47

70 ‘தாய்க்குப் பின்னர்த் தாரம்’ என்ப வென்
தாய்க்குப் பின்னரென் தாரமாய் வருபவர்
யாஅரோ என்ப தறியேன் யானென,

(அமராவதி)

தாய்க்குப் பின்னர்த் தாரம் என்கிறீர்
தாய்க்குயிர் போனபின் தாரம் தேடலாம்

75 போய்க்கண் டன்னையைப் பொறுப்பொடு காக்கென,

(சிம்மன்)

அன்னையிற் சிறந்தாய் அமரா வதிநீ;
உன்னை முதலில் ஓம்புதல் என்கடன்;
அம்பிகா பதிநரி அன்ருெரு நாளுனை
வம்புக் கிழுத்த தறிந்து வருந்தினேன்
 
80 கயவனாய் நிற்குக் களங்கம் செய்தவந்
நயவஞ் சகனை நசுக்கிடு வேனென,

(அமராவதி)

ஆடு நனைவதாய் அழும்ஓ நாய்போல்
கேடு சூழுநும் கிளவி யுள்ளதே;
பெண்களை வம்புக் கிழுக்கும் பேடியர்

85 எண்கள் மிகுதி, இதனையின் றறிகிறேன்;
கயவர்க் குலகில் கணக்கே யில்லை
நயவஞ் சகம்புரி நரிகள் பலவுள
நங்கையர் முன்னே வால்குழை நாய்கள்
இங்குள வாறுபோல் எங்கும் உளவென,

(சிம்மன்)

90 நினது பேச்சென் நெஞ்சை யுறுத்தும்
எனது கருத்தை எடுத்தியம் புவலியான்:

70. தாரம் - மனைவி. 77. ஓம்புதல் - பேணிக்காத்தல். 83. கிளவி - பேச்சு.