பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அமைச்சன் அரசனொடு சூழ்ந்த காதை

73

விரைவிலெந் தலைகளை வீழ்த்த வேண்டா;
அரைகுறை ஆய்வோ அல்லல் தருமால்;
மேலுஞ் சின்முறை மேவி ஆய்வம்;

50 ஏலுஞ் சான்றுகள் எட்டா வாயின்
காலன் கைக்குக் கடிதெமைச் சேர்க்கென,

(வேந்தன் செயல்)

அரண்செய் தவரை ஆய வேண்டுமேல்
அரண்மனை விட்டுநீர் அகலல் வேண்டா;
எங்கணும் எவரொடும் யாதுஞ் சூழா

55 திங்கணே என்னோ டிருத்தல் வேண்டுமால்
என்றே ஆணையிட்டிருத்திய பின்னர்,
கன்னி மாடக் காவலை முடுக்கினன்;
அமராவதி எங்கும் அகலா திருக்கத்
தமரை நிறுவித் தாரகை தனதகம்

60 செல்லச் செய்தனன்; செல்லல் தந்திடும்
வல்லிருள் வருகையை வலியநோக் கினனே.

48. அல்லல் - துன்பம். 50. ஏலும் - ஏற்கக் கூடிய. 52. அரண் செய்து - காவல் செய்து. 59. தமர் - தம்மைச் சேர்ந்தவர். 60. செல்லல் - துன்பம்.