பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை

75

(அரசன் கூறுதல்)

அமைச்சரே எனைப்பொறுத் தருள்க கொன்னே
துமைச்சிறி தளவும் நோகேன் எனது

25 மாட்சியை என்மகள் மாய்க்குஞ் செயலைக்
காட்சி யளவையிற் கண்டனன் யானும்;
நீட்சியா யிவர்செயல் நிகழ விடுவனோ?
நெருங்கும் இவர்தம் நிலையைக் காணின்
ஒருங்குட லுடலோ டொன்றுவர் போலும்!

30 அம்பி காபதி அமரா வதியைத்
தொடுமுன் அவனைத் தொலைக்க வேண்டுமால்;
விடுமென யவனை வெட்டிடு வேனெனும்
கடுஞ்சொல் மடுத்த காடவன் கூறுவான்:

(அமைச்சன் கூறுதல்)

அம்பி காபதி அமராவதி யுடலைத்

35 தொடுதலும் பொருஅதீர் தோய்ந்ததை நம்பிடின்
அடுதலும் செய்வீர் அடாத அவனை.
இன்னுஞ் சிறிது பொறுத்தீண் டிருப்போம்;
அன்னவர் இருவரும் அணைத்துக் கொள்ளின்
முன்னுடல் உறவு கொண்டது முற்றும்

40 உண்மை யெனநாம் உணரலா மென்ன,
அண்மையில் காதலர் அணுகியபோது
அமரா வதியென ஆணுரு விளித்தபின்
அம்பிகா பதியெனப் பெண்ணுரு அழைக்கவே
உருவம் இரண்டும் ஒன்றி யணைத்து

45 மருவக் கண்டனர் மன்னனும் அமைச்சனும்.
காய்ந்த மாடு கம்புபாய்ந் தாற்போல்

39. ஒன்றுவர் போலும் - பொருந்திப் புணர்வர் போலும். 33. மடுத்த - கேட்ட. 35. தோய்தல் - புணர்தல். 86. அடுதல்-கொல்லுதல். 48. விளித்தல் - அழைத்தல். 45. மருவ - தழுவ, 48. கம்பு . கம்பீல் . கம்பங் கொல்லேயில்.