பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரசனும் அமைச்சனும் ஆய்வு செய்த காதை

77

தடுக்கா திருப்பின் தங்கையும் அண்ணனும்
நடுக்கா தணைத்தல் நடந்திரா தென்ன,

(அமைச்சன் கூறுதல்)

பொறுத்தருள் கென்று பொன்னடி பணிந்துளம்

75 கறுத்த காடவன் கக்குவான் கடுவினை:
சூதோ வல்ல சூழ்ச்சியோ மற்றும்
ஏதோ இதனில் இருப்ப துறுதி.
இதற்குக் காரணம் எவரென ஆய்ந்தே
வதக்க வேண்டுமவ் வஞ்சக ரையென

(மன்னன் கூறுதல்)

80 நெஞ்சகம் இவர்க்கு நேரிய தாயின்
வஞ்சகர் விரித்த வலையில் வீழ்ந்ததேன்?
தவறு செய்ததில் தக்க பங்கினை
இவர்களும் ஏற்றுளர் என்ப துறுதி.
கையில் வெண்ணெய்க் கட்டி யிருக்க

85 நெய்யிற் கலைவதேன் நினைத்துப் பாரீர்!
இவரை விட்டுவிட் டேய்த்த வஞ்சகர்
எவரென ஆய்வ தெற்றுக் கோரீர்!
இவரை வினவினே எல்லாம் புலப்படும்
என்று மன்னன் எடுத்துரைத் தனன்பின்

90 நின்ற சிம்மனை நோக்கி நீயிவண் .
வந்த வரலாறு வகையா யுரையென,
நொந்த சிம்மன் நுவலுவன் நிகழ்ந்ததை:

(சிம்மன் கூறுதல்)

இன்று மாலை, அமராவதி ஈந்தாள்
என்று கூறி என்னிடம் ஒருத்தி

74. உளம் - உள்ளம் - மனம். 75. கடுவினை - நஞ்சை. 87. ஓரீர் - உணர்ந்து பார்க்கவும். 93. நுவலுவன் - சொல்லுவான்.