பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அம்பிகாபதி காதல் காப்பியம்

இயற்கவி:

  இந்நூலில் எனது பெயருக்கு முன் ‘இயற்கவி’ என்னும் பட்டத்தைச் சேர்த்துள்ளேன். 1951ஆம் ஆண்டு புதுச்சேரிக் கல்விக் கழகத்தின் வெள்ளி விழாவின்போது, எனனால் எழுதி அரங்கேற்ற்ம் செய்யப்பெற்ற ‘செந்தமிழ் ஆற்றுப்படை’ என்னும் நூலைப் பாராட்டி நாவலர் ச.சோமசுந்தர பாரதியாரால் பரிந்துரைக்கப் பெற்ற இந்த ‘இயற்கவி’ என்னும் பட்டம், புதுவைக் கல்விக் கழகத்தால் எனக்கு அளிக்கப்பெற்றது. இதற்குச் சான்றாக, பாரதியாரின் பரிந்துரைப் பாடலையும் கழகத்தின் சிறப்புப் பட்டமளிப்புச் சான்றிதழையும் பின்னால் சேர்த்துள்ளேன். யான் இதுவரையும் வேறு எந்த நூலிலும் இதனைப் பயன்படுத்திக் கொண்டதில்லையாதலின் இங்கே இதனைத் தெரிவிக்கலானேன். காப்பியமாயிருத்தலின், இந்தப் பழைய பட்டத்தை இந்நூலில் பயன்படுத்தியுள்ளேன்.

அருஞ்சொற்ப் பொருள்:

 போதிய அளவு இலக்கியப் பயிற்சியில்லாதாரும் பொருள் புரிந்து படிப்பதற்கு உதவும் வகையில், யானே, அருஞ்சொற்கட்குப் பொருள் தந்துள்ளேன். சில இடங்களில் தொடர் விளக்கமும் முழு அடிகளின் விளக்கமும் தரப்பெற்றிருக்கும்.

நன்றியுரை:

இந்நூலினை நன்முறையில் அச்சேற்றி வெளியிட்டு விற்பனைப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட—தமிழ் வளர்க்கும், தகைமைசால் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கு மிகவும் நன்றி செலுத்துகிறேன்.

                     

சுந்தர சணமுகன்