பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அம்பிகாபதி காதல் காப்பியம்

(அமைச்சன் கூறல்)


பொம்மையென் மக்கள்; பொருத்தமாய்ப் பின்னல்
பொம்ம லாட்டம் புரிந்துளார் எவரோ;
அவரைச் சிறையில் அடைக்க வேண்டுமால்;

25தவறென் மக்கள் தம்பால் இலையென,
 

(அரசன் கூறல்)

 

பொம்ம லாட்டம் எவரோ புரிதல்
நம்முடை ஒப்புதல் இலாது நடக்குமோ?
நமது குற்றமும் ஏற்றலே நன்றாம். '
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்

30தீதுண்டோ' என்னும் திருக்குறள் காண்கென,
 

(அமைச்சன்)

 

எய்தவர் இருக்க அம்பை நோவதா?
செய்தவர் இருக்கவென் மக்களைச் சீறின்

உய்தல் யாங்ங்னம் உரைத்தருள் கென்ன,
 

(அரசன்)

 

காவகம் வரும்படி கண்டவர் அழைப்பின்
35சேவகர் தம்மையும் செம்மையாய் ஏய்த்தே
உம்மிரு மக்கள் உறலா மோவவண்?
நம்மிரு வருமே நமக்குள் பேசுவோம்:
மண்ணைத் தின்கென மற்றவர் கூறின்
உண்ணுவ ரோமண் உம்முடை மக்கள்?
40எரியில் விழும்படி ஏவினும் மக்கள்


28. பொம்மலாட்டம் - பின்னுல் மறைவாயிருக்துகொண்டு, கயிற்றால் பொம்மைகளே இயங்கச் செய்யும் ஒருவகை ஆட்டம். 29. ஏதிலார் - அயலார். 35. ஏய்த்து - ஏமாற்றி.36. அவன் - அவனிடம்.