பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசன் அமைச்சனை அழைத்த காதை

83


எரியில் மகிழ்ச்சியா யிறங்குவ ரோசொலும்?
'சொல்லுவார் சொல்லினும் கேட்பவர்க் கறிவுதான்
இல்லாது போனதேன்' என்பது பழமொழி.
பிறர்பொருள் விரும்பல் பெரும்பிழை யன்றோ?

45திறல்படை மறவன் தீச்செயல் புரிவதோ!
நாட்டைக் காக்கும் நற்படைத் தலைவன்
வீட்டிலும் நற்பெயர் எடுக்க வேண்டுமே!
வேலியே பயிரை மேய்வது முறையோ?
உண்ட வீட்டிற் கிரண்டகம் செய்வதோ !

50கன்னி தாரகை காரிரா நடுவண்
கன்னி மாடக் காவகம் செல்வதா!
எனவே சிம்மன் தாரகை யென்னும்
இருவர் பாலும் இரும்பிழை யுளதால்;
அறிவு கொளுத்திநீர் அவர்தமைத் திருத்துவீர்

55என்று கூறி இன்னுெரு நாள்நாம்
சென்று காவகம் செய்குவம் ஆய்வு
போய்வரு கென்று புரவலன் கூற,
நாய்போல் குழைந்து நழுவினன் அமைச்சனே.

 

45. திறல் - திறமை. 49. இரண்டகம் - இரண்டு மனம் - வெளியில் ஒருமனம், உள்ளே ஒருமனம்; நம்பிக்கைக் கேடு. 50. காரிரா - கரிய இரவு 54. அறிவு கொளுத்துதல் - அறிவு புகட்டுகள். 57. புரவலன் - அரசன். -