பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி பெற்றோரொடு அளவளாவிய காதை

92

 

(அரசன்)


மக்கள் மீது மடுத்த அன்போ
20ஒக்க ஒருநிகர் சமனென உரைப்ப,

(அமராவதி)


பெற்றோர் மீதியான் கொண்ட பெட்பிலும்
மற்றோர் வேற்றுமை மருந்துக்கும் இலையென,
பெற்றோர் இருவரும் பெருநகை புரிந்தனர்.
மன்னன் உடனே மகளை நோக்கி

25இன்னல் தீர்க்கும் இனிய யாழினை
இன்னே எடுத்துநீ இசையினைத் தொடுத்து:
மிழற்றி ஒருபா மெல்லப் பாடுதி
அழற்சி திர ஆர்ந்திடு வோமென,
அன்னையும் விரும்பி ஆர்வமாய்க் கேட்க,

30மின்னொளி மேனியாள் மேதகு யாழினை
மீட்டி நரம்பில் மெல்லிய விரல்களை
ஒட்டி இனியபா ஒன்று நல்குவாள்:

எடுப்பு

"தெய்வமும் வேறும் உண்டோ-
பெற்றோரினும் பெரிய
தெய்வமும் வேறும் உண்டோ

உடன் எடுப்பு


உய்யும் வழியறிந்தே உயிர்க்குயிராய்க் காத்துப்
பெய்யும் வழிதெரிந்தே பேரன்பினைப் பொழியும்
தெய்வமும் வேறும் உண்டோ

பெற்றோரினும் பெரிய
(தெய்வமும்)

19. மடுத்த - மிக்குள்ள 21. பெட்பு - அன்பு. 26. இன்னே - இப்போதே. 27. மிமுற்றுதல் - மெல்லென ஒலி எழுப்பல். 28.அழற்சி - வெம்மை ; ஆர்ந்திடல் - அனுபவித்தல். 30, மின்னொளி மேனியாள் - அமராவதி ; மேதகு - மேன்மையான.