பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ - 16

127

தொலைவில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது தாமஸ் மாட்டிங்கிலி என்ற விண்வெளி வீரருடன்.

ஜான் யங்கும் சார்லஸ் டியூக்கும் அம்புலியில் 71 மணி தேரம் தங்கினர். இந்த நேரத்தில் மூன்று முறை தம் ஊர்தியை விட்டு வெளிச் சென்று ஆய்வுகளை நடத்தினர். அவர்கள் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் அம்புலியில் சென்றனர். மலையில் 250 முதல் 300 மீட்டர் தூரம் ஏறினர். மலையடிவாரத்தில் காடுபோல் இருந்த பாறைகள் மீதும், மலைச்சரிவு மீதும் அவர்கள் ஜீப் சென்றது; பல தடவை அது குதித்துக் குதித்துச் சென்றது. அவர்கள் அம்புலி ஜீப்பை ஒட்டகம் போல் ஓட்டிச் சென்றனர். கரடுமுரடான பயணத்தின் பொழுது சரிவு அளக்கும் கருவியையும், பிள்புற டெண்டரையும், பின்புறச் சக்கரத் திருப்பும் கருவியையும், இறுதியில் பெரும்பாலும் ஓட்டுச் சாதனம் முழுவதையும் ஜீப் இழந்து விட்டது. ஒரு கட்டத்தில் அவர்கள் தம் ஜீப்பை மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டினர். ஜீப் பயணம் 27•1 கி.மீ, தடைபெற்றது.

அம்புலி வீரர்கள் ஊர்திக்கு வெளியே 20 மணி 14 நிமிடம் இருந்து ஆய்வுகள் நடத்தினர், மூன்று கட்டச் சோதனைகளும் வெற்றியுடன் நடந்தேறின. மூன்றாவது அம்புலி உலாவின் பொழுது வடக்கு ரே {North Ray) என்ற ஆழமான அம்புலிக்குழி ஒன்றைக் கண்டனர். இக் குழி நிலா ஊர்தி இறங்கியுள்ள இடத்தினின்றும் 5-1 கி.மீ. வட திசையில் உள்ளது. குழியின் வினிம்பில் வழுவழுப்பான கல் வளையம் உள்ளது. இதுகாறும் அம்புலியில் மனிதன் எட்டிப் பார்த்திராத அக் குழி 341 கி.மீ. நீளவிட்டமும் 180 மீட்டர் ஆழமும் உள்ளதாகும் என்று ஒளிப்படம் மூலம் ஆய்ந்து மதிப்பிடப் பெற்றுள்ளது. நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலத்திற்கு மூன்னர் ஒரு விண்கல் சந்திரனிலிருந்த ஓர் எரிமலைக் குழப்பில் மோதியதால் இந்தக் குழி ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்பெறுகின்றது. இந்த இடத்தில் கிடந்த கற்களில் சில சுமார் 9 மீட்டரிலிருந்து 14 மீட்டர் நீனம் உள்ளவையாக இருந்தன. அம்புலியின் தோற்-