பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44



பெர்தா: ஆஸ்திரியாவின் தயவினால் என்னை அடையலாம் மனப்பால் குடிக்கவேண்டாம்! முன்னேர்களிடமிருந்து நான் பெற்றுள்ள செல்வங்களின் மீது அவர்கள் கை வைக்கிறார்கள். எதற்கு? என்னை விட மேலான ஒருவருக்கு அவற்றைச் சேர்ப்பதற்குத்தான்'! நாடு நாடாய்ப் பிடிப்பதும், பிறர் சுதந்திரத்தை விழுங்குவதுமாகிய ஆசை என்னையும் வாழவிட்டுவைக்காது. என்னையும் கடத்திச் செல் வார்கள்; மன்னர் சபையில் மண்டியிட்டுக் கிடக்கும் ஒருவனை மணந்து கொள்ளச் செய்வார்கள், ஒரே ஒரு விஷயம்தான் என்னைக் காக்கக் கூடியது. அதுவே உன் காதல்

ருடென்ஸ் : அப்படியானால் நீ இங்கேயே, என் நாட்டிலேயே எனக்கு உரியவளாக வாழத் தீர்மானித்து விட்டாயா பெண்ணரசி ! உன்னைத் தேடியல்லவா. நான் இதுவரை தொலைவில் சுற்றிவந்தேன்! நான் புகழை வேண்டினேன்அதுவும் உன்னை அடைவதற்கே! எழில் மிகுந்த இன்பகர மான போகங்களை யெல்லாம் துறந்து, அமைதியான இந்த மலைநாட்டிலேயே நீ அடைபட்டிருக்க முடியுமா? அப்படியானால், என் இலட்சியம் கைகூடிவிட்டது! குன்றுகள் சூழ்ந்து, குளிர்காவும் சோலைகள் குலவும் என் நாடே இனி நம் சுவர்க்கம் ! வருகிற பகையெல்லாம் வரட்டும் மலைபோல் அலைகள் எழுந்து வீசட்டும்! உச்சி மீது வானமே இடிந்து விழட்டும்! எதற்கும் இனி அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பது இல்லை!

பெர்தா : என் இதயத்தில் கண்ட கனவெல்லாம் இப்போது தான் நனவாயிற்று__என் நம்பிக்கை வீண் போகவில்லை

ருடென்ஸ் : என்னைச் சூழ்ந்து நின்ற மாயை ஒழிந்தது என்னை மயக்கி வந்த கானல் நீரும் மறைந்தது பெற்ற தாயும் பிறந்த பாென்னாடுமே விமானத்திலும் சிறந்தவர் இங்கேயே என் தாயகத்திலேயே__என் இன்பமுள்ளது, இந்த இன்ப நிலையத்திலேதான் என் இளமை கவலை யற்ற சுதந்திரத்தோடு மலர்ச்சி பெற்றது. பார்க்கும் இட மெல்லாம், பார்க்கும் பொருளெல்லாம் இன்பமயமாக உள்ளன. நிலையாக நிற்கும் மரங்களும், மலைமீது தவழ்ந்து வரும் அருவிகளும், இங்குத்தான் என்னாேடு உறவுகொண்டு உரையாடுகின்றன. இங்கேயே தேடுதற்கரிய தெவிட்டா