பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 செல்வமாகிய உன்னையும் பெற்று விடுவேன் இது ஒன்று தான் குறையாக இருந்தது ! பெர்தா : சூதுவாதற்ற சுத்தமான மக்களையும், இந்த நாட்டை வும் விட்டு, வேறு வெளியில் எங்கே இன்ப்த்தைக் காண முடியும்? இங்கே பொய்யும் பொருமையும் st)%) ! பொழுதும் இன்பமாகப் பறந்து செல்கின்றது! இப்போது தான் உன்னை விறல் வீரனுகக் காண்கிறேன்! விழிப்புடன் வீறுகொண்டெழுந்த வீர மக்களின் முன்னணியில், விடுதலை பெற்ற தனிப்பெருந் தலைவகை உன்னைக் காண்கிறேன் ! மக்கள் உள்ளன்போடு உனக்குச் செலுத்தப் போகும் மரியாதைக்கு நிகராக மணிமுடி தரித்த மன்னன் எவனும் இதுவரை பெற்றிருக்க மாட்டான் ! ருடென்ஸ்: உன்னையும் அவ்வாறே நான் காண்கிறேன்! இன்பம் கொழிக்கும் என் இல்லத்தில் மாதர் குலத்தின் மணி விளக்காக நீ விளங்குவாய்-நீ இருக்குமிடமே சுவர்க்க பூமியாகும்! வசந்த காலம் மலர்களை அள்ளிச் சொரிவது போல, என் பாதையெங்கும் நீ முன்னே முன்னே மலர் மழை பொழிந்து கொண்டிருப்பாய்! உன்னைச் சுற்றிலும் எங்கும் எழில் நிறைந்திருக்கும், பட்ட மரங்கள் தளிர்த்துப் பசுமையாகும் ! பெர்தா : கர்வத்தோடு கர்ச்சனை செய்து கொண்டு திரியும் ஒரு வீரனுடன், அவன்கோட்டைக்குள் சிறகொடிந்துகிடப்பதை விட்டு, என் இதயக் கோயிலை இருப்பிடம் கொண்ட உன் னையே நான் நாடியுள்ளேன்! இங்கே எனக்கும் என்னல் இன்பமடையும் மக்களுக்கும் இடையில் எங்களைப் பிரித்து வைக்கும் கோட்டைகளுமில்லை, கொத்தளங்களுமில்லை ! ருடென்ஸ் : ஆனல் நான் முதலில் விடுதலை_பெறுவது எப்படி? ஆர்ாயாமல் என் மீது நானே சுமத்திக் கொண்ட கட்டுக்களிலிருந்து சுதந்திரம் பெறவேண்டுமே! பெர்தா: சீறி யெழுந்த சிங்கத்தைப் போலக் கட்டுக்களைத் தகர்த்தெறிய வேண்டும் ! உன் மக்களைக் காக்க உவகை யுடன் துள்ளி யெழு ஆண்டவன் உனக்காக அளித் துள்ள பணி அது ! (வேட்டைக் கொம்புகள் ஊதும் ஒலி துரத்தில் கேட்கின்றது.)