பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 குடோல்ப் : ஆண்டவனே! நிலைமை முற்றி விட்டதே! உண்மையாகவே உத்தரவு பிறந்து விட்டது (குழந்தை வால்டரைப் பார்த்து) அடேய், பையா, மண்டியிட்டு கவர்னர் துரையிடம் மன்னிப்பு வேண்டு, உயிர்ப்பிச்சை கேளு! பெரிய வால்டர் : (தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் துடிக்கும் மெல்ச்தலிடம்) சற்று அடக்கத்தோடு பொறுமையா யிருஉன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்-அமைதியாயிரு! பெர்தா இதுவே போதும், ஐயா! ஒரு தந்தையின் உள்ளத்தை இதற்குமேல் புண்படுத்துவது மனிதத்தன்மை யாகாது! ஒரு சிறு குற்றத்திற்காக உயிரையே இழக்க வேண்டியது தண்டனையானல்-அவன் இதற்குள் பத்துத் தடவை இறந்திறந்து பிழைத்தாயிற்று போதும், அவனை வீட்டுக்குப்போக விடுங்கள்! நீங்கள் யார் என்பதை இப் பொழுது அறிந்திருப்பான். அவன் மட்டுமல்ல, அவன் குழந்தைகளும், குழந்தைகளின் குழந்தைகளும் இனி இதை மறக்கவே மாட்டார்கள்! ஜெஸ்லர்: ஊம், வழி விடுங்கள் சீக்கிரம் நீ ஏனப்பா நிற் கிருய்? மரண தண்டனை பெற்ற உன் உயிரை நான் அப் போதே யமனுலகிற்கு அனுப்பியிருப்பேன்! ஆலுைம் உனக்கு அதைக் காத்துக்கொள்ள ஒரு வாய்ப்பளித்தேன். உன் உயிர் உன் கண்ணிலும், கையிலும்தான் இருக்கிறது! எல்லோரும் தான் அம்பு விடுகிருர்கள்-ஆனல், இதயத் தின் உணர்ச்சிகளால் கை பதருமல் எய்பவனே உண்மை வில்லாளன்! பெரிய வால்டர் : (அவர் முன்பு முழங்கால் படிய விழுந்து) பிரபோ! உங்கள் அதிகாரத்திற்கு நாங்கள் தலை வணங்கு கிருேம்; இருந்தாலும் நீதி செலுத்துவதோடு நில்லாமல், சற்று இரக்கமும் காட்டுங்கள்! என் சொத்துக்களில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள்-ஏன், பூராவையுமே வைத்துக்கொள்ளுங்கள்-பெற்றவன் கையாலேயே இந் தக் கோரக் கொடுமை நடக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம்! iால்டர் தாத்தா, நீங்கள் யாரிடமும் பிச்சை கேட்க வேண்டிய தில்லை! நான் எங்கே நிற்க வேண்டுமென்பதை மட்டும்