பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ருடென்ஸ்: இதைக் கண்யமாய் ஏற்றுக் கொள்கிறேன்! என் வாளுள்ள வரை இந்தக் கையைக் காப்பேன்! மெல்ச்தல்: மண்ணை உழுகின்ற கை வாளையும் ஏந்தி மார்புை யும் காத்துக் கொள்ளும்! ருடென்ஸ்: நீ என் மார்பைக் காத்து நில்லு-நான் உன் மார்பைக் காக்கிறேன்! ஆனல் நாடெல்லாம் அந்நியர் ஆதிக்கியம் இருக்கிறதே-முதலில் அதை வேரோடு வெட்டி வீழ்த்துவோம், வாருங்கள் பிறகு நம் உறவுகளைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம்! (சில நிமிடங்கள் மெளனமாயிருக்கிருன்.) இன்னும் பேசாமலே யிருக்கிறீர்களே! உங்கள் சேதி யெல்லாம் எனக்குத் தெரியாதா, என்ன ? ரூட்லியிலே கூடினிர்கள்-முடிவு செய்திருக்கிறீர்கள் ! நீங்களாகவே இதை என்னிடம் முன்பே சொல்வீர்கள் என்று எதிர்பார்த் தேன்! நான் பிறந்த பூமிக்கு, இன்றும், என்றும் துரோகம் செய்யமாட்டேன்! போராட்டத்தை நெடுநாள் தள்ளி வைத்துவிட்டீர்கள். நேரமாகிறது! இப்போது நிலைமையும் மாறிவிட்டது . இனியும் தாமதித்தால், வீரன் டெல்லை நாம் மறுபடியும் காண முடியுமோ, என்னவோ ? ஸ்டாபாச்சர்: கிறிஸ்மஸ் விழா வரை காத்திருக்க நாங்கள் உறுதி செய்தோம். ருடென்ஸ்: அங்கே நான் இருக்கவில்லை. நீங்கள் வேண்டு மால்ை காத்திருங்கள்-நான் உடனே செயலில் இறங்க வேண்டும்! பெரிய வால்டர் : இந்தப் புனித உடலை மண்ணுள் சேர்ப்பது முதல் கடமையல்லவா ? s ருடென்ஸ்: அடிமை மண்ணில் என் மாமனை அடக்கம் செய்ய வேண்டாம் விடுதலை பெற்று வெற்றி மாலை சூட்டி அடக்கம் செய்வோம் ! உங்களுக்காகவும் எனக்காகவும் உடனே போரில் குதிப்பது அவசியம்! என் காதலி பெர்தாவையும் எதிரிகள் எங்கோ கடத்திக்கொண்டு போய் வைத்திருக்கின்றனர்! ஸ்டாபாச்சர் : என்ன துணிவு ! பெண் பாவம் பொல்லாதது!