பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பனிக்கட்டிதான்! அவனுக்குக்கிழே மூடுபனி கடல்போல் வளைந்து மூடியிருக்கின்றது. பட்டியும் தொட்டியும், வீடுகளும் குடிசைகளும்-மனிதர் வாழும் பகுதிகளெல்லாம் - அவன் கண்ணில் படுவதில்லை. மேகத் திரைகள் விலகினால்தான் அவன் நம் உலகைச் சிறிது பார்க்க முடியும்.

புயல் ஆரம்பமாகி நிலத்தோற்றம் மாறுகின்றது: மேகங்களின் நிழல் தரைமீது விழுகின்றது. மலைகளின் நடுவிலிருந்து சடசட' என்று ஒசை கேட்கின்றது. செம்படவன் ருவோடி தன் குடிசையிலிருந்து வெளியே வருகிருன். பாறைகளின் உச்சியி லிருந்த வேடன் வெர்னி கீழே இறங்கி வருகிறான்; ஆயன் குவோனி தோளில் பா: வாளியை ஏந்திக்கொண்டு வருகிறான்: அவனுக்குப் பின்னால் அவனுடைய உதவியளான ஸெப்பி எனும் பையனும் வருகிருன்

ருவோடி : (ஓடத்தைப் பாாத்து) யென்னி! அடேய் சீக்கிரம் சிக்கிரம்! வலைகளை வலித்துவிடு குளிர்ந்த வாடை வீசுகிறது. புயலும் நெருங்கி_வருகிறது! நினைக்கு முன்னே அது இங்கேயே வந்துவிடும் !

குவோனி: ருவோடி! பெருமழை பொழியப் போகிறது நிச்சயம்! என் ஆடுகள் வேகமாகப் புல்லைக் கடிக்கின்றன. நாயும் தரையை முகர்ந்து முகர்ந்து பார்க்கின்றது!

வெர்னி: ஏரியிலிருந்து மீன்கள் உயரே துள்ளுகின்றன. மீன்கொத்திக் குருவிகள் நீருள் மூழ்குகின்றன. நிச்சய புயல் பக்கத்திலே வந்தாகிவிட்டது !

குவோனி: ஸெப்பி, மாடுகள் சிதறிப் போகாமல் கவனி !

ஸெப்பி : நம் சிவலைப் பசு 'செல்வி' வருவதுபோல் தோன் கிறது- அதன் மணி ஓசை கேட்கிறது.

குவோனி: 'செல்வி' வந்தால், எல்லாப் பசுக்களும் வந்த போல்தான் !

ருவோடி: நல்ல நல்ல மணிகள் வாங்கிக் கட்டியிருக்கிறான். உன் பசுக்களுக்கு! கணிர் கணிர் என்று கேட்கிறதே!

வெர்னி: பசுக்களும் அழகானவை! ஏன் அப்பா, எல்லா பசுக்களும் உன்னுடையவையா?