பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116, அம்மையும் அப்பனும் கிட்கிந்தை வானரங்களுக்கும் அரக்கனாகிய வீடண. னுக்கும். உதவிய வரலாறே இராமாயணம்: இன்னும் குமரகுருபரர் போன்றார் தம் பிறவியிலேயே ஊமையாக இருந்து.கந்தர் கலிவெண்பாவால் பேசும் திறம் பெற்று எண்ணற்ற காவியங்கள் இயற்றிய வரலாறுகள் அம்மை அப்பரின் அருள் நலன்களேயாம்-இருவரையும் பெற்ற ஆன்மாக்கள் பெறும் வாழ்வு நிலைகளேயாம். மனிதனாக வந்த இராமன் மனிதனாகவே நடித்தான். அவனுக்குத் தெரியாதா வாலியின் வலிமை. இராமன் தலையசைத்தால்-வாலி வாயசைத்தால் இராவணன் சீன்தயைக்கொண்டு வந்து சேர்த்திருப்பானே! ஆனால் இராமன் மனிதனாகவே நடித்தான். எனவே வாலியை வதைத்தான். குரங்காகிய வாலி, மனிதனாகிய இராம னுக்கு அறிவுரை கூறியது மட்டுமன்றி மனிதனினும் மேம் பட்டுத் தன்னைக் கொல்லக் காரணமான தம்பியை அந்த, இராமனிடமே அடைக்கலந்தந்து அவன் மேல் பழி வரா மல்.பாதுகாக்கவும் சொல்லுகின்றான். இது அம்மையப் பர்தம் அருள் நலமேயாகும். வாலி இராமனை நோக்கி, 'வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல் தூயவன் மைந்தனே! நீ பரதன்முன் தோன்றினாயே’ 'அரக்கர் ஒர் அழிவுசெய்து கழிவரேல் அதற்கு வேறோர் குரக்கினத் தரசைக் கொல்ல மனுநெறி கூறிற்றுண்டோ இரக்கம் எங்கு உகுத்தாய் அப்பா? என் பிழைப்பு என்ன கண்டாய்? பரக்கநீ பழியைப் பூண்டால் புகழையார் பறிப்பார் அப்பா'