பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 119 இறைவனிடம் நாரை -நலம் பெற்ற நாரை வரம் வேண்டு கின்றது. மதுரை அன்னையின் அருட்குளத்தில் மீன்கள் இல்லையல்லவா! அதற்கு அந்த நாரையின் தவமும் வரமுமே வழியாக அமைந்தன. தான் மட்டுமன்றி, தன் இனம் மட்டுமன்றி, தன் போன்ற பறவை இனமே அக்குளத்தில் உண்டாகும் மீன்களை உண்ணின் பழிவந்து சாருமே என்று அந்த நாரை கருதுகிறது. அதற்கு முத்தி அளித்த இறைவன் அதன் உள்ளத்தைத் தூய்மைப் படுத்தி விட்டான். என்றென்றும் பறவைக் கூட்டங்களுக்குப் பழி வந்து சேரா வகையில் அதில் மீன்களே உண்டாகா வரத்தை நாரை கேட்கிறது. அப்பனும் அருள் செய்கின் றான. "வள்ளல் என்மரபு உள்ளவும் மற்றைய புள்ளும் இந்த புனிதமலர்த் தடத்து உள்ள மீனுயிர் உண்ணின் எக்காலமும் தள்ளொணாப் பழி வந்து சாருமே' (20) எனக் கூறி, என்றும் இத்தட மீன்இலா வகைநீ நன்று சால்வரம் நல்கென வெள்ளிமா மன்று ளானும் வரம்தந்து போயினான் சென்று நாரை சிவலோகம் சேர்ந்ததால் (21) இவ்வாறு நாரைக்கு முத்தி அளித்த படலத்தில் பரஞ் சோதியார் கூறி, அதனால் அம்மையப்பர் அருள் நிலை யினை எண்ணி வியக்கின்றார். 'தன்கிளை அன்றி வேறு பறவை கள்தாமும் . - -- தன்போல் நல்கதி அடையவேண்டிற்றே கொல்!

  • - . . இந்நாரை செய்த