பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25–8–93 4. அண்டத்தின் சுழற்சி அம்மையும் அப்பனும் ஆன்மாவினை அணைத்தும் அடித்தும், மன்னித்தும் அரு ளி யும் தன்னோடு இணைத்துக் கொள்ளும் வகையினையெல்லாம் கடந்த மூன்று வாரங்களில் கண்டோம். இன்று அவற்றை உணர் வதற்காதாரமாகிய உலகினைப் பற்றியும் எண்ணற்ற அண்ட கோளங்கள் பற்றியும் அவற்றின் சுழற்சி பற்றியும் அனைத்தும் முடிவில் அவனடியில் ஒன்றும் உயர்நிலை பற்றியும் கண்டு மகிழ்வோம். - முன்பே நான் முப்பொருள் உண்மை பற்றிக் கூறி யுள்ளேன். பதி, பசு, பாசம் எனச் சைவ சித்தாந்திகள் அவற்றைக் கூறுவர். முன்னவை இரண்டின் திறத்தினைக் கண்ட நாம் இன்று அவற்றோடு இணைந்த பாசத்தின் கூறுகளாகிய அண்டங்கள்-அவற்றின் சுழற்சி, வளர்ச்சி ஆகியவை பற்றிக் காண இருக்கின்றோம். இந்த அண்ட மும் ஆண் ட வனிடத் தி லிருந்து வேறுபட்டதன்று. அகிலாண்ட கோடியெல்லாம் தன் அருள் வெளிக்குள்ளே தங்கும் படிக்கும் இச்சை வைத்து, அவற்றின் உள்ளுயிர்க் குயிராய்த் தழைத்து நிற்கின்றான் ஆண்டவன் எனத் தாயுமானவர் பாடியுள்ளார். ஆழ்வார்களும் தேவார திருவாசகம் பாடிய நல்லவர்களும் இந்த உண்மையினைப் பலபடப் பாராட்டிப் பகர்ந்துள்ளனர். . பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி