பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128 அம்மையும் அப்பனும்

ஆலோசனை தடைப்படுகிறது. உடனே இராமன் கையை உயர்த்தி, அவற்றை நோக்க அவை ஒலி அடங்கின. இதை உவமையாக வைத்து, தலைவியின் களவொழுக் கினைப் பற்றி ஊரில் உள்ளோர் ஒரே ஆரவாரப் பேச்சாக முழங்கிக் கொண்டிருக்க, தலைவன் மணம் நேர்ந்தான். இச் செய்தியை அறிந்ததும், அந்த ஆரவாரம் அடங் கிற்று என்பார் புலவர் கடுவன் மள்ளனார். அலர்வாய்ப் பெண்டிர் அம்பல்........ ●●●.粤 é 移 瞬 வெல்போர் இராமன் அருமறைக் கவித்த பல்வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ்வழுங்கல் ஊரே' அகம் (70) இவ்வாறு மற்றொரு தனிப்பாடல் உலகத் தோற்றத் துக்கும் ஒரளவு துணை செய்கின்றது. இராமன் போர் முடித்து இலங்கை சென்று வீடணனுக்கு முடி சூட்டுவதற் காக நகருள் செல்லுகின்றான். ஊர்க் கோடியில் ஒதுக் கிடத்து வாழும் மக்கள் துணி துவைப்பதற்கென ஒரு கல் இருந்தது. அது பொற்கல் போலும். அதைத் தம் அயோத் திக்கு எடுத்துச் செல்ல அவன் நினைத்தான். உடனே உலகம் பிறந்த மூன்றாம் நாளில் பிறந்தவன் எனக் கருதும் ஜாம்பவான் அவர் முன் வந்து, அன்று முதல் இன்று வரை நடைபெற்ற-இருந்த பல நிகழ்ச்சிகளைக் கூறி, இது வரையில் உதவி செய்து அதற்குப் பதில் உதவி பெறுவாரைக் காணவில்லை; இராமா! நீ வீடணனுக்கு அரசு தந்து, இக்கல்லை உனக்காக எடுத்துச் செல்ல, எண்ணினையே! அது தவறு இல்லையா என்கின்றான். இராமன் உணர்ந்து, தான் அங்கேயே இருந்து, பற்றற்ற இலக்குவனை அனுப்பி முடி சூட்டி வரப் பணிக்கின்றான். ஜாம்பவான் பாடிய பாடல் இதுவாகும். -