பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அம்மையும் அப்பனும் காட்டும் அண்ட எல்லையை-விரிவினை ஒருவாறு உணர லாம். 'அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரித்தன இல்நுழை கதிரின் துன்அணுப் புரைய யவராகப் பெரியோன்' என்பது மணிமொழி. மணிவாசகர் இந்த அடிகளில் பல அறிவியல் அறிஞர்கள் இன்றும் காணா உண்மைகளையும் அண்மையில் கண்ட உண்மைகளையும் அன்றே கூறி உள்ளமை, அன்றைய தமிழர்தம் அறிவியல் திறனைப் புலப்படுத்துவதாகும். அண்டம் எல்லையற்றது. அதன் நடுப்பகுதி இந்த உலகம். அந்த உலகம் உருண்டையானது என்கின்றார் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்தான் - பின் வலம் வந்தான் - பின் உலகம் உருண்டை என்று கூறினான், இவையாவும் நேற்றையஅண்மையில் கண்ட உண்மைகள். ஆனால் மணிவாசகர் அன்றே கண்டார். அது மட்டுமன்று, இவ்வாறாய உலகங்கள் எத்தனை? அறிவியல் அறிஞர்கள் ஒரு சில வற்றையே கணக்கிடுவர். ஆனால் அவரோ அளப்பரியன என்கின்றார். அதையும் ஒர் உவமையால் விளக்குகின் றாா . ஒரு சிறு வீடு. அதன் கூரையில் சிறு துவாரம். சூரியன் ஒளி அதன் வழியாக உள்ளே நுழைகின்றது. அதைப் பாராதவர் இரார். அனைவருக்கும் தெரிந்த அதைக் காட்டி, அச்சூரியனின் ஒளிக்கதிரைக் கூர்ந்து காணச் சொல்லுகின்றார். அதில் சிறு சிறு தூசுகள் பறந்து கொண்டே-சுழன்று கொண்டே இருக்கும். கண்ணுக்குத் தெரியும் அத்தனை தூசுகளையும் எண்ண முடியுமா? இவையன்றிக் கண்ணுக்குத் தெரியாதன எத்தனை