பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. அம்மையும் அப்பனும் ஆதி பரம்பொருளின் ஊக்கம்-அதை-அன்னை எனப் பணிதல் ஆக்கம் சூதில்லை காணும் இந்த நாட்டீர்-மற்றத் தொல்லை மதங்கள் தூக்கம் என்றும், 'ஓம்சக்தி என்பவர் உண்மையைக் கண்டார் ஒண்மை கொண்டார் உயிர் வண்மை கொண்டார்’ என்றும், நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண் பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ வஞ்சனை இன்றி பகை இன்றி சூதின்றி வையக மாந்தர் எல்லாம் தஞ்சமென்றே சமைப்பீர் அவர்பெயர் சக்தி ஒம்சக்தி ஓம்சக்தி ஒம்! என்றும், பல வகையில் காட்டுகின்றார். 'நன்றே செய் வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே' என்று மணிவாசகர் கூறியாங்கு பாரதியும் தீது நன்மை யெல்லாம் உனது தெய்வ லீலை யன்றோ என்கிறார். பராதியின் பாடல்கள் எளிமையாக உள்ளாமையின், அவர் காட்டிய சக்தியின் தன்மையினை நன்கு உணர்ந் திருப்பீர்கள். இனி மேலே செல்லலாம். இத்தகைய அருள் நிறைந்த அன்னை அடிப்பாளா? என்ற ஐயம் எழுதல் இயல்பு. தாய் மகனை அடிக்கிறாள் என்றால் எதற்காக அடிக்கிறாள்? தன் மகன் தவறு செய்தால், அதைத் தவிர்க்க, திருத்த, செம்மைப்படுத்த அடிக்கிறாள் என உலகம் நன்கு அறியும். சாதாரண இப் பிறவியில் அமைந்த தாயே அப்படி என்றால் எப்பிற விக்கும் தாயாகிய அன்னையின் அடி கருணையின் வயப்