பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 அம்மையும் அப்பனும் குழல் விரித்தால் இயற்கை மாறும்-போர் நிகழும்பஞ்சம் பட்டினி உண்டாகும்-பார் நடுங்கும். இவை இன்றும் காணும் நிகழ்ச்சியாகும். (இது பற்றி தனிக் கட்டுரை பின் வருகிறது). எல்லாக் கொடுமைகளும் நிகழும். இதற்குப் பாரதத்தில் இந்த நிகழ்ச்சியும் இனி காண இருக்கும் சில்ம்பில் மதுரை எரிந்த நிகழ்ச்சியும் பிறவும் சான்றுகளாகும். துக்க வீட்டில் தலை விரித்து அழுதல் இயல்பே நாடே இன்று துக்கத்தில் உள்ளதுகொள்ளை, கொலை, குண்டு வெடிப்பு, பாராளுமன்றமாநில மன்றங்களில் அடிதடி-இன்னும் சாதி சமயத்தின் பேரால் கொடுமைகள் நிகழ்கின்றன. ஏன்? எங்கும் பெண்கள் தலைவிரி கோலம். ஏனென்று கேட்பாரில்லை. பராசக்தி விரைவில் கேட்டு உரிய தண்டனையை வழங்கு வாள்-வழங்கத் தொடங்கி விட்டாள்-ஆனால் நாம் இன்னும் திருந்தவில்லை. இந்த அன்னை துரெளபதியின் செயலைப் பாரதியார் காட்டியதைக் கண்டோம். இதையே வில்லியார் தம் பாரதத்தில் காட்டிய வகையும் கண்டு மேலே செல்வோம். துரெளபதி கூறுகிறாள், புன்தொழிலோன் யான் இருக்கக் காட்டியதன் தொடைவழியே புள்வாய் குத்திச் சென்றிடுக. ஆருயிர் என்று எவரும் வெருவுறச் சபித்தாள் தெய்வம் அன்னாள்' (சூது 1195) என்று அவளைப் பராசக்தி ஆக்கி-ஆம் அவள் சபதம் பலிப்பதனால் அவளை அன்னை பராசக்தியாக்கி-சபதம் செய்ததை வில்லியார் காட்டுகிறார். மேலும் அவள்