பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை அடித்தால் 43 உண்டு கொலாம் அருள் என்கண்; உன்கண் . ." - ஒக்கின் பண்டைய இன்று பரிந்தளித்தி என்றாள்' (கைகேயி சூழ்வினை 10) என்று தனக்கு முன்பொருகால் தருவதாகிய இருவரங் களையும் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். அவற்றுள் ஒன்றே பரதன் நாடாள வேண்டும் என்பது; மற்றொன்று இராமன் பதினான்கு ஆண்டுகள் வனம் புக வேண்டும் என்பது. இவற்றால் உலகமே தன்னைப் பழிக்குமே என்று அஞ்சவில்லை. தசரதன் மயங்கி வீழ்ந்த போதும், தானே இராமனை அழைத்து, தந்தை கூறிய தாகக் கூறி அவனைக் காட்டுக்கு அனுப்புகிறாள். அவள் அதனால் வருந்தவில்லை. கணவன் இறப்பில் வருத்தம் இருப்பினும், அவன் என்றென்றும் பழிநீங்கப் பெற்று பெருமை காத்தவன் ஆவான் என்றே பெருமகிழ்ச்சி கொண்டாள். இந்த உண்மை பரதனுக்குத் தெரியா தல்லவா! அதனால் அவளைப் பின் குகனுக்குப் அறிமுகப் படுத்திய போது, - இடரிலா முகத்தாளை அறிந்திலையேல் இந்நின்றாள் என்னை ஈன்றாள்' என் அறிமுகப்படுத்துகிறான். அவள் இடர்ப்பட வேண்டு வதில்லையே! தன் கணவன் பழி தீர்ந்தான் என்று அவள் உள்ளம் மகிழ்கிறதன்றோ? இவ்வாறு கைகேயியாகிய அன்னை சீற்றம் காட்டி, அடிப்பது போல் அழுது காட்டி நாட்டிற்கும், அவள் பிறந்த புகுந்த வீடுகளுக்கும் நன்மையே செய்தாள். எனவே நிர்ன் மேலே காட்டியபடி இந்த அன்னையின் செயலும் அறத்தோடும் அன்போடும் உலக வாழ்வின் வழிகாட்டியாகவே அமைகின்றது.