பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 அம்மையும் அப்பனும் கினார். ஆயினும் அதையும் தடுத்து, ஆறுமாதமாக உண்ணாதிருக்கும் நானே இன்னும் தொடவில்லை அதற்குள் நீ அவசரப்படுகின்றாயே' என நிறுத்தினார். பின் உன் மைந்தனை உடன் உண்ண அழையும் என்றார். ஆனால் நாயனார், 'ஈறும்முதலும் இலாதார்க்கு இப்போது உதவான் இவன்' என்றார். எனினும் இறை வன் தெருவில் சென்று அவனை அழைத்து வாருங்கள் என்றார். 'நாமிங்குண்பது அவன்வந்தால் நாடி - அழையுமென நம்பர் தாமுமருளிச் செய்தரியார் தலைவர் அமுது - செய்தருள யாம்.இங்கு என்செய்தால் என்னாம் என்பார் விரைவுற்று எழுந்தருளால் பூமென் குழலார் த மோடும் புறம்போய் அழைக்கப் போம்போது - (80) தெருவில் யாருமில்லை-நல்ல வெய்யில்-பள்ளி விடும் நேரம், பாலன் பள்ளியில் இருந்து வரும் நேரம் தான். செய்யமணியே சீராளா! வாராய் சிவனார் - - அடியார் நாம் உய்யும் வகையால் உடன் உண்ண அழைக்கின்றார் என்று ஓலமிட' (81) எனச் சேக்கிழார் அவர்கள் ஓலமிட்டு அழைக்கும் நிலை யினை நம் உள்ளமெல்லாம் உருகும் வகையில் காட்டு கின்றார். ஆம் அடித்த கை அணைக்கும் நேரம் வந்து விட்டது. என்ன நடந்தது? -