பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அம்மையும் அப்பனும் தொழுதகு சிற்றடிபெரி யவிரல் சுவைத்து மைக்கணிர் துளும்ப வாய்விட்டு அழுதணை யாடையிற் கிடந்தான் - அனைத்துயிரும் ஈன்று காத்தளிக்கும் அப்பன் (விருத்த. 28) என்று அனைத்துலகும் ஈந்து காத்து அளிக்கும் ஆண்டவன் குழந்தையாகி அழும் காட்சியினைப் பரஞ்சோதியார் அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார். இனி கண்ண னையும் முருகனையும் குழந்தையாகப் பாவித்துப்பாடிய அடியவர்தம் பாடல்கள் பல. முருகனைப் பாடவந்த அருணகிரியார் அவனை மாயோன் மருகனாகக் காட்ட விழைகின்றார். குழந்தையாகிய முருகனும் மாமனாகிய மாலும் குழந்தையாக உள்ளனர் என்பதையும் விளக்கு கிறார். 'எந்தை வருக ரகுநாயக வருக மைந்த வருக மகனே இனி வருக என்கண் வருக எனதாருயிர் வருக அபிராமா! இங்கு வருக அரசே வருக முலை உண்க வருக மலர் சூடிட வருக - என்று பரிவினொடு கோசலை புகல - - வருமாயன் சிந்தை மகிழும் மருகா' என முருகனாகிய குழந்தையை நினைக்கும் போது அவன் மாமனும் குழந்தையாகவே அருணகிரியாருக்குக் காட்சி தருகிறான். முருகனைப் பிள்ளையாகப் பாடிய பிள்ளைத்தமிழேர் அளவற்றன. முழுமுதலாக எண்ணப் படும் சிவன் ஒருவனைத் தவிர்த்து மற்றைய அனைவருக் கும் பிள்ளைத் தமிழ் உண்டல்லவா! மதுரை மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழில் குமரகுருபரர், பிள்ளைத்