பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவரையும் பெற்ற ஆன்மா 93 பற்றின் பற்றிடம் குற்றக் கொள்கலம் புற்றடங்கு அரவின் செற்றச் சேக்கை அவலக் கவலை கையாறு அழுங்கல் தவலா உள்ளம் தன்பால் உடையது மக்கள் யாக்கை இது என உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறி பாராய்' (மணிமேகலை) என்று முந்திய வினை வழியே வந்தது மட்டுமன்றி மேல் வரும் பிறவிகளுக்கும் வினையே தேடிச் செயல்படுகின்றது என்கிறார். இவ்வாறு தொல்காப்பியரும் பிற தமிழ் இலக் கணங் கண்ட நல்ல புலவர்களும் உயிர் வாழ்வே மொழி யும் அதன் இலக்கணமும் எனக்கண்டு உலகுக்கு உணர்த் துவர். - இனி இவ்வுயிர் பற்றி ஆங்கில அகராதிகளும் பிறவும் கூறுவனவற்றை ஒரு சிறிது காண்போம். “Life” argir p gyfŘstavở Qerrtågp/#g State of Ceaseless Change and functional activity peculiar to organized Matter esp-to the portion of it constituting an animal or plant before death, என்றும், Something on which its depends whether one shall live or die-Fresh Short after narrowly escaped-fndividual's actions & functions, manner of existence. என்றும், Active part of existence, business and pleasures of the world. என்றும் கூறப் பெறுவதைக் காண்கிறோம். இவையும் நாம் மேலே கண்ட அப்பர், தொல்காப்பியர் போன்றோர் கூற்றுக்களை ஒத்திருப்பதைக் காணலாம்.