பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 109



48. விருதுபட்டி பறையர்கள் விஷபேதியால் மடிகின்றார்களாமே!

அந்தோ விருதுபட்டியில் வாசஞ்செய்யும் பெரியசாதிகளென்போர்களே இன்னும் உங்களுக்கு இதக்கம் வரவில்லையா. வன்னெஞ்சமாறவில்லையா. பறையர்கள் என்போர் உங்களை ஒத்த மக்களல்லவா.

பொதுவாகக் கட்டி வைத்துள்ள திருக்குளங்களிலும் கிணறுகளிலும் அவர்களைத் தண்ணீர் மொண்டு குடிக்கவிடாமல் உப்புத்தண்ணீரையும் குட்டைகளிலுள்ள அசுத்த நீர்களையும் அருந்தி விஷபேதிகண்டு, வெகு ஏழைக்குடிகள் மடிகின்றார்களாமே, அவைகளைக்கண்டேனும் உங்களுக்கு இதக்கம் பிறக்கவில்லையா. மிருகங்களுக்கு ஜலம் மொண்டுகொடுத்து காப்பவர்கள் இந்த மக்களை ஆதரிக்கமனமில்லையா.

இத்தகையாய் மனிதர்களை மனிதர்களாக பாவிக்காத இந்துக்கள்வசம் சுயராட்சியங்கொடுத்துவிட்டால் பறையர்கள் என்னும் இப்பரதேசிகளை இன்னும் எங்கு பரக்கடிப்பார்களோ விளங்கவில்லை, இந்து தேசத்திலுள்ளவர்களின் இவ்வகைக்கொடூரச் செயல்களையறியா, கனம் லார்ட்மார்லியவர்கள் இந்தியர்களில் ஒருவருக்கு எக்சிகூட்டி மெம்பர் உத்தியோகமளிக்க வழிபார்க்கின்றார் இதுவும் ஏழைகளின் துர்ப்பாக்கியமே.

- 2:38; மார்ச் 3, 1909 -


49. இந்தியர்களுக்குள் எக்சிகூட்டிவ் மெம்பர்

அதாவது இந்தியர்களில் ஒருவரை எக்சிகூட்டிவ் மெம்பரில் சேர்க்க வேண்டும் என்பது கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் அபிப்பிராயம். எக்சிகூட்டிவ் மெம்பர் என்பது யாதெனில் தற்கால கவர்னரவர்கள் ஆலோசினை சங்கத்தில் செக்கண்டகவர்னர், தர்ட்கவர்னர், போர்த் கவர்னர், என வழங்கி வரும் இஸ்தானத்திற்கு உரியவர்களின் பெயராம், எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் இப்பெயரும், இவர்கள் செய்யவேண்டிய செயலும் ஆலோசிக்க வேண்டிய மந்திரங்களும் இவ்விந்து தேசத்தில் வாசஞ் செய்யும் முப்பது பெயர் அல்லது முன்னூறுபெயருக்கு விளங்கக் கூடியதாயிருக்கு மாயின், முப்பது கோடி பெயருக்கு, எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் பெயரும், அவர்கள் செய்யவேண்டிய செயல்களும், அவர்கள் ஆலோசனையின் மந்திரவாதங்களும் இன்னது இனியதென்று விளங்காமலிருப்பதுடன் எக்சிகூட்டிவ் மெம்பரென்னும் சொல்லின் சப்தமும் அவர்கள் செவிகளுக்குள் நுழைந்திருக்கமாட்டாது.

இத்தேசத்தோர் செவிகளில் இடைவிடாது நுழைந்து வரும் சங்கதிகள் யாதெனில்.

நீ என்ன சாதி, அவனென்னசாதி நான் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி என்பவைகளேயாம்.

இத்தகைய சாதிபேத சப்தங்களே பெரும்பாலும் நிறைந்துள்ள இந்தியர்கள் ஒருவருக்கு எச்சிகூட்டிவ் மெம்பர் நியமனஞ் செய்வதானால் எந்த சாதியோரை ஏற்கலாகும். பிராமணரென்று சொல்லிக்கொள்ளும் படியானவர்களே பெரிய சாதிகளாகவும் வாசித்தவர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களுக்கே கொடுக்கலாம் என்று அவர்களை அடுத்த சாதிபேதம் உள்ளோர் கூறுவதாக வதந்தி,

அவ்வதந்தியை மகமதியர்களும், சாதிபேதமற்ற திராவிடர்களும், சுதேச கிறீஸ்தவர்களும், யூரேஷியர்களும், மற்றுமுள்ள சிற்றரசர்களும் ஒப்புக்கொள்ளப்போகிறதில்லை. பிராமணரென்பவர்களுள் ஒருவருக்கு எக்சிகூட்டிவ் மெம்பர் அலுவலைக் கொடுப்பதானால் அவ்வகுப்பாருக்குள் தர்ம்மங்கள் எப்படி நடத்துகின்றார்களோ அதுபோலவே தங்கள் கர்ம்மங்களையும் நடாத்த ஆரம்பிப்பார்கள். அதாவது சாதிபேதம் வைத்துள்ள ஓர் மனிதனாயிருப்பினும் அவன் இரண்டு நாள் பசி பட்டிணியாற்றி கைத்து பிராமணரென்போர் வீட்டண்டை வந்து பசியின் குறையைக் கூறுவானாயின்