அரசியல் / 471
உண்டுசெய்து சாதிபேதமில்லாது வாழும் யதார்த்த பௌத்தர்களைக் கெடுக்கும் பிறட்டு பௌத்தர்களேயாம். சாதிபேதமில்லாது வாழ்வோர் இவர்கள் பௌத்தத்திற் சேர்ந்து இவர்கள் போதனைக்குட்பட்டு ஒழுகுவார்களாயின் தாழ்ந்தசாதி பெளத்தர்களென இழிவடைவதுடன் உள்ள சிறப்புஞ் சீரும் அழியவேண்டியதேயாம்.
இதைக்கொண்டு அவர்கள் சாதிசிறப்பையும் மதசிறப்பையும் பெருக்கிக்கொண்டு யாதார்த்த பௌத்தர்களை பலுகி பெருகவிடாமற் செய்து தங்கள் சுயநலத்தைப் பெருக்கிக் கொள்வதற்கேயாம்.
இத்தகைய மூன்று வகைக் கூட்டத்தோர் வெளிதோன்றி சாதிபேதமில்லாது வாழ்வோர் மத்தியில் வந்து ஆடுகள் நனையுதெனப் புலிகள் குந்தி அழுவது போல தோன்றி தங்கள் தங்கள் மித்திரபேதங்களால் மயக்கிக் கெடுத்து வருகின்றார்கள். அதன் காரணங்களோவென்னில் சாதிபேதமில்லாக் குடிகள் யாவரும் பௌத்தர்களாக விலகிவிடுவார்களாயின் தங்களது பொய்சாதிவேஷமும் பொய்மதக் கூட்டமும் தன்னில் தானே கனங்குறைந்து சீர்கெட்டுப் போவதுடன் ஓர்கால் சுயராட்சியத்திற்கு முனைவோமாயின் இச்சாதிபேதமற்று வாழ்வோர்களே எதிர்த்து நாசப்படுத்தி விடுவார்கள் என்னும் பீதியால் அவர்கள் மேனோக்கத்தைக் கெடுக்க முயன்றிருக்கிறார்கள். சாதிபேதமில்லா திராவிடர்களே எச்சரிக்கை, எச்சரிக்கை. புலிகளின் வாயினின்று விலக்கியது போலும், விஷப்பாம்புகளின் மத்தியிலிருந்து விடுவித்தது போலும். சாதிபேதமுள்ள சத்துருக்களின் இடுக்கங்களினின்று கார்த்துரட்சித்து வரும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நன்றியறிந்த வந்தனத்தை என்றென்றும் கூறி அவர்களது ஆட்சியிலேயே முன்னேறும் வழியைத் தேடுங்கள். சத்துருக்களை மித்துருக்கள் என்றெண்ணி மோசம் போகாதீர்கள். எச்சரிக்கை, எச்சரிக்கை, எச்சரிக்கை.
- 7:1; சூன் 11, 1913 -
292. நமது பத்திரிகை
அன்பர்காள்! நமது தமிழன் பத்திரிகையை ஆரம்பித்து ஆறுவருடம் முடித்து ஏழாவது வருடம் நடைபெற்று வருகின்றது. இப்பத்திரிகையை ஆரம்பிக்கும்போதே குருவிசுவாசத்தையும் இராஜ விசுவாசத்தையும் பீடமாகக் கொண்டே நடத்திவருகின்றோம். உள்ளளவும் இனிநடத்தியும் வரப்போகின்றோம் இதனந்தரார்த்தார் அறிந்த குருத் துரோகிகளும் இராஜ துரோகிகளும் இப்பத்திரிகையைப் பரவவிடக் கூடாது என்னும் பொறாமே குணத்தால் பத்திரிகை செல்லுமிடங்களெல்லாஞ் சென்று பத்திரிகையை வாங்கவிடாமல் தடுத்தும் சிலவஞ்சினர்கள் துரைமக்களுக்கு ஏவல்புரியும் உத்தியோகஸ்தர்கள் வாசஞ்செய்யும் வீடுகள் தோருஞ் சென்று 'தமிழன்' பத்திரிகையை வாங்கவிடாமற் கெடுத்தும் சாதிபேதமில்லாமல் சேரிகளில் வாழ்வோர்களிற் சிலர் இராஜாங்க உத்தியோகம் அமர்ந்துகொண்டால், முதலியாரோடு கூடிச்சென்றால் முதலியாரென்று எண்ணுவார்களென்றும், செட்டியாருடன் கூடிச்சென்றால் செட்டியாரென்று எண்ணுவார்களென்றும், நாயுடுவுடன் கூடிச்சென்றால் நாயுடுவென்று எண்ணுவார்கள் என்றும் புலியைக்கண்டு பூனைச் சூடிக்கொள்ளுவது போல் போலி வேஷமிட்டு கசாதியோர் சீர்திருத்தத்திற் சேராமலும் சுசாதி அபிமானங் கொள்ளாமலுமுள்ள அறிவிலிகள் இப்பத்திரிகையை வாங்காமலும் விடுத்துவந்தார்கள். இத்தகைய வஞ்சகக்கூத்தோர் மத்தியில் சுசாதி அபிமானிகளும் சுசாதி விருத்தியை நாடுவோரும் விவேகமிகுத்தவர்களுமாகியப் பரோபகாரிகள் முயன்று பத்திரிகையை நிலைபெறச் செய்தும், அதனைப்பல தேசங்களிற் பரவச்செய்தும் அங்கங்கு சாது சங்கங்களைக் கூடச் செய்தும் எமது உட்கருத்துக்கு இசைந்து குரு விசுவாசத்திலும் இராஜ விசுவாசத்திலும் நிலைபெற்று வருகின்றார்கள். அத்தகைய சத்தியசீலர்களாலும் உத்தமபோதகர்களாலும் நடை பெற்றுவருந் தமிழன் பத்திரிகை இத்தமிழ்