676 / அயோத்திதாசர் சிந்தனைகள்
யார். மராஷ்டகபாஷையில் பிராமணன்யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார், கன்னடபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தெலுங்குபாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். வங்காள பாஷையில் பிராமணன் யார், க்ஷத்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யாரென்னும் ஆள் அகப்படாது திகைப்பதே போதுஞ்சான்றாம்.
மலையாளமென்னுங் கொடுந்தமிழ்நாட்போரை வஞ்சித்து அவர்கள் மத்தியிலிருந்துகொண்டு வருணாசிரம தர்மசாஸ்திரம் எழுதும்படி ஆரம்பித்தபடியால் அங்கு வழங்கும் வர்ம, சர்ம, பூதி என்னும் தொடர்மொழிகள் மற்றெங்கும் வழங்குவதற்கு ஏதுவின்றி அவரவர்கள் மனம்போனவாறு வெவ்வேறு தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொண்டு தங்கடங்கள் மனம் போல் பெரியசாதிகள் என்னும் பெயர்களை மநுதன்ம சாஸ்திரத்திற்கு ஒவ்வாமலே வைத்துவருகின்றார்கள்.
அவைகள் யாவும் சாதித்தலைவர்களுக்கு அவசியமில்லை. சாதித்தலைவர்களது போதனைப்படி தங்கள் சாதிக்கட்டுக்குள் அடங்கி இந்துக்களென்போர்க்கு உட்பட்ட எந்த சாமிகளைத் தொழுதுக் கொண்டாலுஞ் சரி, எச்சாதித் தொடர்மொழிகளைச் சேர்த்துக் கொண்டாலுஞ்சரி, தங்களுக்கு மட்டிலும் அடங்கி தங்களை பிரம்மா முகத்திலிருந்து வந்தவர்களென்று ஒடிங்கி, தங்களையே பிரம்ம சாமியென்று வணங்கி, அமாவாசை தட்சணை, கிரஹண தட்சணை, நோம்பு தட்சணை, உபநயனதட்சணை, பூசாரி தட்சணை, புண்ணியதான தட்சணை, சங்கராந்தி தட்சணை, சாவுதோஷ தட்சணை, பிள்ளை பிறந்த தட்சணை முதலியவைகளைக் கொடுத்துக் கொண்டே வந்தால் போதும். மற்றப்படி அந்தசாதி இந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளை பெற்றால் அநுலோமம் பார்க்கவேண்டியதில்லை. இந்த சாதி அந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளைபெற்றால் பிரிதிலோமம் பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் வரைந்துக்கொண்டுள்ள மநுதர்ம சாஸ்திரத்தில்மட்டிலுங் காணலாமேயன்றி அநுபவத்தில் ஒன்றுங் கிடையவே கிடையா.
அதன் காரணமோவென்னில் அவரவர்கள் மனம்போல் சாஸ்திரங்கள் எழுதிக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதிப்பெயர் ஏற்படுத்திக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதித் தொடர் மொழிகளை சேர்த்துக்கொள்ளுவதுமாய செயலை உடையவர்களாதலின் சாஸ்திரத்திற் கொற்ற அநுபவமும், அநுபவத்திற் கொற்ற சாஸ்திரங்களும் அவர்களிடம் கிடையாவாம்.
இவற்றிற்குப் பகரமாய் “யாரடா விட்டது மானியமென நான்தான்விட்டுக் கொண்டேன்” என்னும் பழமொழிக்கு ஒக்க அவனவன் மனம்போனவாறு ஒவ்வோர் சாதிப்பெயர்களை வைத்துக்கொண்டபடியால் அப்பெயரை அவனே சொன்னால்தான் வெளியோருக்குத் தெரியும். அதைக் கண்டே இத்தேசத்தோருக்குள் நீவிரென்னசாதி என்று வினவுவதும் அதற்கவன் வைத்துக்கொண்ட சாதிப்பெயரைப் பகருவதும் வழக்கமாம். அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப் பெயர்களை அவனவன் சொன்னாலே தெரியுமன்றி சொல்லாதபோது தெரியாது. வீதியில் மாடு போகிறது, நாய்போகிறது, மனிதர்கள் போகின்றார்களென்று கூறலாம். மற்றப்படி அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப் பெயர்களை அவனவனைக் கேட்டே தெரிந்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும். அவனவன் பிரியத்திற்கும் மநுதன்ம சாஸ்திரத்திற்கும் யாதொரு சம்மந்தமுங்கிடையாது.
புருசீக தேசத்தினின்று வந்து குடியேறிய ஆரியர்களும், இத்தேசத்திருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிட, வங்காள, காம்போஜர்களும் பௌத்த தன்ம அந்தணர்களைப்போல் பிராமண வேஷமணிந்து அவ்வேஷங்களுக்கு ஆதரவான வேதங்களையும், புராணங்களையும். ஸ்மிருதிகளையும், அதிற்