பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மைந்தன் பிதாவைநோக்கி தந்தையே, அரசவல்லபத்தில் நான் எதைக் காட்டவேண்டுமென்றார்.

குழந்தாய், மலையரசன் புத்திரியை நாடி அவ்விடம் வந்திருக்கும் அரசர்களை ஜெயித்து அசோதரையைக் கைப்பற்றிக் கொள்ளுவாயாகில் அதுதான் உன்னுடைய அரசவல்லபமென்றான்.

அரசபுத்திரன் எழுந்து யுத்தசன்னத்தராய் தனியே வெளிவந்ததைக் கண்ட அரசன் பதினாறுவயதுள்ள சிறுவனாச்சுதே என்ன யுத்தஞ் செய்வானென்று பயந்து ரத கஜ துரக பதாதிகளாகுஞ் சதுரங்க சேனைகளைத் தொடரவிட்டான்.

அந்த சதுரங்க சேனைகள் யாவையும் முன்னேரவிடாமல் தனியே முன்சென்று சகல அரசர்களையும் விற்போர், வாட்போர், மற்போர், வாகுபோரென்னும் சதுரங்க வீரத்தால் ஜெயித்து அசோதரையைக் கைப்பற்றிக் கொண்டார்.

உடனே மலையரசனாகும் சுப்ரத்தி மண்முகவாகை அணுகி அரசே, எனது புத்திரி அசோதரை பிறந்தகாலத்தில் ஒர் பெரியோன் சாக்கைய கணிதர் வந்து குழந்தை பிறந்த காலவரைகளைக் கணக்கிட்டு இம்மகவை மணம்புரியும் மணாளன் மனோதிடமும், ஞானோதயனுமாக விளங்குவதன்றி அவன் கரங்களால் பூமியைப் பரித்து வருத்த வித்தை விதைக்கினு முளைக்கும். பட்டமரத்தை நாட்டினுந் துளிர்க்கும். அந்த காட்சியே எக்காலும் நித்திய மங்களமாக வழங்குமென்று கூறியிருக்கின்றார். அதையும் நான் சோதிக்க வேண்டியதாயிருக்கின்றதே என்றான்.

ம்மொழியைக் கேட்ட மண்முகவாகுக் கலக்கமுற்று வருத்தவித்து முளைப்பதும், பட்டமரந் துளிர்ப்பதும் இயல்பல்லவே. ஆயினும் சித்தார்த்தி குழந்தையாயிருந்தகாலத்தில் கன்றீணாப் பசுவும் பால் சுரந்தூட்டியிருப்பதால் இதையும் பார்ப்போமென்றுன்னி மைந்தனை அணுகிக் குழந்தாய் மலையரசன் புத்திரி அசோதரைக்கு நீர் உரிய கணவனாயின் வருத்தவித்து முளைக்கவும், பட்டமரந் துளிர்க்கவும் வேண்டும் என்கின்றான். இது கூடுஞ்செயலோ என்றான். அதற்கு வாலறிஞன் நகைத்து தந்தையே, அவர்கள் மனோரம்மியப்படி சோதித்துக் கொள்ளட்டும் என்றார்.

மண்முகவாகு பூரித்துக் கிளை சமூகங்களாகும் அமாத்தியர், சாக்கையர், சேனாதிபதியர், தூதுவர், சாரணர், காரணக் கிளைஞர், கடைகாப்பாளர், நகரமாக்கள், படைத்தலைவர், யானை வீரர், அடுத்த நட்டாளர், மடைத் தொழிலாளர், மருத்துவ மாக்கள், கணித கலைஞர், உயர்குடை வேந்தர், முற்றும் சுற்றத்தவர் யாவர்க்கும் மங்கல முரசம் அறிவித்து சகலரையும் வரும்படிச் செய்தான்.

அக்கால் மலையரசனாகும் சுப்ரத்தி தனது பார்ப்பதி அசோதரையை மண்முகவாகின் அரண்மனைக்குக்கொண்டுவராமலும், மணாளன் மனைக்கும் ஈரைங்காத வழியில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு வாலறிஞன் வருத்த விதைகளையும், பட்டமரத்தையுந் துளிர்ப்பிக்கும் வரையில் புதல்வியை அழைத்து வருவதில்லை என்று மணாளன் வருகைக்கெதிர்பார்த்திருந்தான்.

இதன் விருத்தாந்தத்தை உணர்ந்த பெரியோர்கள் மண்முகனை அணுகி தலைத்தார்வேந்தே, தமது புதல்வர் சகல அரசர்களையுஞ் செயித்து மலையரசன் புதல்வியைக் கைப்பற்றிக்கொண்டபோதே அசோதரைத் தமதரணில் வந்து சேர வேண்டியதிருக்க அவை தவிர்ந்து வருத்த வித்து முளைப்பதும், பட்டமரந் துளிர்ப்பது மாகிய போக்குகள் நேரிட்டக் காரணம் யாதென உசாவினார்கள்.

அதைக்கேட்ட மண்முகவாகு பெரியோர்களை அமர்த்தி அன்பர்களே, என் மனைவி மாயாதேவி சித்தார்த்தியைக் கருப்பையிற்றாங்குமுன் ஓர் சொற்பனங்கண்டு சொல்லினள், அதாவது தான் நித்திரை செய்யுங்கால் ஓர் சிறிய வெள்ளை யானையின் குட்டி சுயம்பிரகாச வடிவமாய்த் தன் வயிற்றில் நுழைந்ததென்பதே.

இக்கனவையும் நினைவையும் அறியவேண்டி அசித்த சாக்கையரை அழைத்து மாயாதேவியின் சொர்ப்பனத்தை வெளியிட்டேன் அவர் நிதானித்து